நடிகர் விஜயின் நடிப்பில் தீபாவளியன்று வெளியிடப்பட்ட 'துப்பாக்கி' திரைப்படத்தில் முஸ்லிம்களை விமர்சித்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து நடிகர் விஜய்யின் வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஜய் நடித்துள்ள துப்பாக்கி திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. தமிழகத்தில் மாத்திரமன்றி இலங்கையிலும் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நன்றாக இருப்பதாக வமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ள நிலையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மும்பை தீவிரவாத சதி சம்பவப் பின்னணியில் இத்திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்களை விமர்சிப்பது போல இத்திரைப்படம் உள்ளதாக இந்திய தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. மேலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இணைந்து விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து விஜய் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் நீலாங்கரை வீட்டுக்கும், அவரது பெற்றோர் வசித்து வரும் வீட்டிற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment