Share on
ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் எவ்விதமான உரையும் ஆற்றாது கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துரள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்காததை அடுத்து, தமது சிறப்புரிமைகள் மீறியுள்ளதாக கூறி, அந்த கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார சுயாதீனமான உறுப்பினராக நாடாளுமன்றத்தில் செயற்பட போவதாக அறிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்களின் பேச்சுரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் ரணில் கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment