உம்மா என்னால் சிறையில் இருக்க முடியாது;ரிஸானா நபீக்

Share on
உம்மா என்னால் சிறையில் இருக்க முடியாது. நான் எப்போது உங்களிடம் வந்து சேருவேன். சொல்லுங்கள் உம்மா என்று இருவாரங்களுக்கு முன் தொலைபேசியில் என்னுடன்பேசிய மகள் அழுகிறார் என சவூதி சிறையில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ரிஸானா நபீக்கின் தாயார் பரீனா தெரிவித்தார்.
ரிஸானா நபீக்கை சிறையில் சந்தித்த இலங்கை டாக்டர் கிபாயா சிறையிலிருந்து தனது தொலைபேசி மூலம் தாயாரை தொடர்பு கொண்டபோது தாயாருடன் உரையாடிய மகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மகளின் விடுதலை (மன்னிப்பு) தொடர்பில் ஆரம்பத்தில் பொதுநல அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் மனித உரிமை இயக்கங்களும் குரலெழுப்பிய போதும தற்போது அவை மெளனமாகி விட்டதென ரிஸானா நபீக்கின் தாயார் கவலை தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ராமநாயக்கவை தொடர்பு கொண்டு ரிஸானா நபீக்கின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகளை வினவியபோது. சட்டமா அதிபர் திணைக்களம் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. சட்டமா அதிபர் சவூதிக்கு விஜயம் செய்து சவூதி சட்டத்துறையுடன் கலந்துரையாடவுள்ளதாகக் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் பாலித பர்ணாந்து சவூதி அரேபியாவுக்கு விரைவில் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சவூதி அரேபியாவில் ஷரீஆ சட்டமே அமுலிள்ளது. ஷரீஆ சட்டத்தின் படி ரிஸானா நபீக்கை மரணமான குழந்தையின் பெற்றோர் மன்னித்தால் விடுதலை செய்யப்படுவாள். பெற்றோரில் ஒருவர் 2011.06.14 வில் மன்னிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெற்றோர் இருவரினதும் மன்னிப்பு விடுதலைக்கு அவசியமாகும்.

ரிஸானா நபீக் வயது குறைந்தவளாக இருந்த போது வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் பிறப்புச் சாட்சிப்பத்திரம் திருத்தங்களைச் செய்து பெற்ற கடவுச்சீட்டு மூலம் அவளை 2005.05.04 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக அனுப்பிவைக்கப்பட்டார். கைக்குழந்தையொன்று அவளின் பராமரிப்பில் விடப்பட்டது. குழந்தைக்கு புட்டி பால் புகட்டும் போது 2005.05.22 ஆம் திகதி குழந்தை மரணமானது.

ரிஸானா நபீக் கொலைக்குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டாள். விசாரணைகளின் பின் சவூதி நீதிமன்றில் 2007.06.16 ஆம் திகதி மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி மன்னரை தொடர்பு கொண்டு ரிஸானா நபீக்கின் தீர்ப்பு தொடர்பில் கருணைகாட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார். 2010.11.10 ஆம் திகதி ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்ததை அடுத்து மரணதண்டனை விதிப்பது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ரமழான் மாதத்தில் ரிஸானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அது நடைபெறவில்லை. ஷரீஆ சட்டத்தை உறுதியாக கடைப்பிடிக்கம் சவூதியில் ரிஸானா நபீக்கின் விடுதலைக்கு பெற்றோர் இருவரும் மன்னிப்பினை பெற்றுக் கொள்வது அவசியம் என உலமாக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :