17 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அபேஸ் செய்ததா கொள்ளுப்பிட்டி வங்கி.? பெண் ஒருவருக்கு நடந்த கசப்பான அனுபவம்.

Share on

வங்கியில் வைப்பிலிட்ட 17,724 அமெரிக்க டொலர்களை அரசுடைமையான வங்கியொன்று அபகரித்துவிட்டது என பெண்ணொருவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ஷிரானி அனோமா துலாவ என்ற மேற்படி பெண், கொள்ளுப்பிட்டியிலுள்ள அரச வங்கியொன்றில் கடந்த 1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி, வதிவோர் வெளிநாட்டு கணக்கில் 17,724 அமெரிக்க டொலர்களை வைப்பு செய்ததாகவும், தான் அந்தப் பணத்தை மீளப் பெறச் சென்ற வேளையில் அந்தப் பணம் மீளப்பெறப்பட்டு விட்டதாக கூறப்பட்டதாகவும் கூறினார்.

இது தொடர்பில் தான் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி வங்கியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், முறைப்பாட்டாளர் வங்கிலிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தாதபடியால் அவரது கணக்கிலிருந்து கடன் பணம் கழிக்கப்பட்டதாக கூறினார்.

இருப்பினும் தான் கடன் ஏதும் பெறவில்லை என குறித்த பெண் கூறினார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை டிசெம்பர் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :