Share on
கொஸ்வத்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை இன்று (16) அதிகாலை 4.35 அளவில் சோதனை செய்த வேளை, ரி-56 ரக துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற நபர் வசம் இருந்த பொதியொன்றை பிரித்து பார்த்தபோது அதில் T-56 ரக துப்பாக்கியும் 24 ரவைகளும் இருந்ததாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
மாரவில, கொஸ்வத்த, வென்னப்புவ ஆகிய பகுதிகளில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பொது மக்களிடம் பணம் மற்றும் நகைகளை இவ்விருவரும் பறித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2012-10-28ம் திகதி மாரவில பகுதி வீடொன்றில் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு வீட்டில் இருந்த பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
களவாடப்பட்ட ஒரு தொகை பணம் மற்றும் சில நகைகள் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
கொஸ்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment