யுத்த காலத்தில் கூட இப்படியான வரிசைகள் இருக்கவில்லை! மரியாதையாக வீடு செல்வதுதான் ஒரே வழி என்கிறார் கல்முனை விகாராதிபதி சங்க ரத்தன தேரர் .



காரைதீவு சகா-
டந்த கால யுத்தத்தை விட மோசமானது இன்றைய பொருளாதார நெருக்கடி நிலை.அந்த பாரிய யுத்தத்தின் பொழுது கூட இப்படி நீண்ட வரிசைகள் இருக்கவில்லை. இன்றைய நெருக்கடி இருக்கவில்லை. பயத்தின் மத்தியிலும் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

இவ்வாறு கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி வண ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார் .

அவர் நேற்று சமகால நெருக்கடி நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது.

இன்று மைதானத்தில் விளையாட வேண்டிய இளைஞர்கள் சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்க வேண்டிய இளைஞர்கள் பெட்ரோலுக்கும டீசலுக்கும் எரிவாயுவுக்கும் நாட்கணக்கில் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றார்கள் .

அரசாங்கம் மோசமான ஒரு நிர்வாகத்தை செய்ததன் காரணமாக இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மக்கள் யாரை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்களோ அதே மக்கள் அதே நபரைவீட்டுக்குப் போ என்று இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னமும் அவர் போகவில்லை.

அதற்கு முட்டுக் கொடுக்க வந்த பிரபல நடிகர் ரணில் இது வரை சாதித்தது ஏதுமில்லை. அவரை எந்த மக்களும் தெரிவு செய்யவில்லை .தெரிவு செய்யாத ஒருவரை பிரதமராக்கியது ஜனாதிபதியின் முதல் முட்டாள்தனம் .

இந்த நிலை நீடித்தால் அதே மக்கள் செருப்பாலும் சாணியாலும் மலத்தாலும் அடித்து விரட்ட வேண்டி நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் .

எழில் மிகுந்த இந்த நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு யார் காரணம் என்பதனை உலகமே அறிந்தது.

மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள மக்கள் சந்தோசமாக சுற்றுலா சென்றவர்கள் நின்று நடு வீதியிலே படுத்து காலத்தை கடத்துகிறார்.
மக்களை பிச்சைக்காரனாக மாத்தி நாங்கள் கடவுளாக இருக்கலாம் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள் .

மதத் தலைவர்களுக்கு என்று ஒரு மரியாதை கூட இல்லை. மேடையிலே மாத்திரம் நான்குமத தலைவர்களை அழைக்கிறார்கள்

இங்கு பெட்ரோல் நிலையங்களிலும் சரி ஏனைய இடங்களிலும் சரி ஒரு மருந்துக்கு கூட அந்த மரியாதையை காணவில்லை.

அவர்களுக்கான முன்னுரிமையை காணவில்லை. இனிமேல் கொண்டு பொது வைபவங்களில் மதத் தலைவர்களை ஒப்புக்காக அழைப்பதை நிறுத்துங்கள்.

மக்கள் இன்று மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தினமும் க்யூவில் நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

4 அல்லது 5 நாட்கள் தொடர்ச்சியாக பெற்றோலுக்காக வரிசையில் இருக்கின்ற கவலைக்கிடமான நிலை. அதற்கு ஒரே வழி கோட்டா வீடு போக வேண்டும் . ரணில் வீடு செல்ல வேண்டும் இந்த அரசாங்கம் தேவையில்லை .மக்கள் ஒரு தேர்தலை விரும்புகிறார்கள்.
நாட்டை நாங்கள் காப்பாற்றுவோம். நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். மக்கள் அடிமைகளாக வாழவேண்டும் மனநோயாளிகளாக மாற வேண்டும் என்று நினைக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேற வேண்டும். மக்களைப் பற்றி சிந்திக்கின்றவர்கள் களவெடுக்காதவர்களை நாம் தெரிந்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் .
யாரும் எமக்கு தேவையில்லை. அரசாங்கம் உடனடியாக பதவி விலகி புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தி உலக நாடுகளின் உதவியை பெற்று பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் அழகான எமது நாடு செழிக்க வேண்டும் இதுவே எனது அவா. மக்களுக்கு உதவுங்கள் இந்த இக்கட்டான காலகட்டத்தில் புண்ணியம் கிடைக்கும்.. என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :