ஜனாதிபதி முன் பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது.-ஹரின்



ஆர்.சனத்-

ஜனாதிபதிமுன் பதவியேற்றதை விரும்பவில்லை - அதனால்தான் படம்கூட எடுக்கவில்லை
'கோ ஹோம் கோட்டா' என்ற நிலைப்பாடு மாறாது
பஸில் காலைவாரினால் பதவி விலகுவேன்
சஜித் தூய்மையான தலைவர்

அமைச்சராக பதவியேற்ற பின்னர், ஹரின் பெர்ணான்டோ இன்று (20) ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். மனுச நாணயக்காரவும் இதில் பங்கேற்றிருந்தார். இதன்போது அமைச்சர் ஹரின் கூறிய முக்கியமான சில கருத்துகள் வருமாறு,
'கோ ஹோம் கோட்டா' - என்ற எனது நிலைப்பாட்டில் எள்ளளவேனும் மாற்றம் இல்லை.
சஜித் பிரேமதாச தூய்மையான அரசியல் தலைவர். அவரை குறைகூற விரும்பவில்லை. ஆனாலும் சவாலை ஏற்க அவர் முன்வரவில்லை.
கட்சிக்காகவே நான் அமைச்சு பதவியை ஏற்றேன். கட்சியுடனேயே தொடர்ந்தும் பயணிக்க எதிர்பார்க்கின்றேன். கட்சியை காட்டிக்கொடுக்கவில்லை.
சவாலை ஏற்று, மூன்று மாதங்கள் அமைச்சராக செயற்படுவேன், பஸிலோ வேறு நபர்களோ காலை வாரினால் வெளியேறுவேன்.
கோட்டாபயவை பாதுகாக்க முற்படவில்லை. அவர் பதவி விலகியாக வேண்டும். இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றேன்.
ஜனாதிபதி முன் பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது. அதனால்தான் படம்கூட எடுக்கவில்லை. எனினும், நாட்டுக்காக அதனை செய்தோம். நபர் அல்ல, 'ஜனாதிபதி' என்ற பதவிநிலையை மதிக்க வேண்டும்.
நாடு ஸ்தீரமடைந்த பின்னர், ஜனாதிபதி பதவி விலகுவார் என நம்புகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :