பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி
ஆரம்பிக்கப்பட்டு 102 ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை (1) பாடசாலை வளாகத்தில் பாடசாலை முதல்வர் திரு.எம்.சபேஸ்குமார் தலைமையில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் ,பகுதித் தலைவர்கள்,ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வின் போது விசேட பூசை , பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைத்தல் , விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் , ஞாபகார்த்த கேக் வெட்டுதல் , விசேட உரை என்பன இடம்பெற்றன.
இப்பாடசாலையின் நூற்றாண்டு விழா 2019 ஆண்டு இதே தினத்தில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.