கல்முனை மாநகர சபையினால் வழங்கப்படும் சேவைகளை பரிசீலனை செய்ய வேண்டும்-உறுப்பினர் சப்ராஸ் மன்சூர்

எம்.எச்.எம்.றஸான்-

ல்முனை மாநகர சபையின் 35 வது கூட்டம் 2021.02.24 ஆம் திகதி புதன் கிழமை நடைபெற்றது. இவ் அமர்வில் கௌரவ கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்.

கல்முனை மாநகர சபைக்கு சேவைபெறும் நிமிர்த்தம் வருகின்ற பொதுமக்களுக்கு அவர்களது தேவைகளை விரைவாகவும் நேர்த்தியாகவும் வழங்கவேண்டும் என்பதோடு சேவைகள் அனைத்தும் முறையாக வழங்கப்படுகின்றதா என்பதை பரிசீலனை செய்வதற்கு உள்ளக நடைமுறை பரிசீலனை குழு (Internal Quality audit Committee) ஒன்றினை இஸ்தாபித்து அக்குழுவின் ஊடாக மாநகரசபையினால் வழங்கப்படும் சேவை சிக்கல்களை உடனே தீர்த்துவைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைய இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகர பொதுவசதிகள் குழு தவிசாளர் கௌரவ ஹென்றி மகேந்திரன் மற்றும் சபை முதல்வர் உறுதி வழங்கினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :