மனைவிமார் வீட்டு வேலை செய்வதற்கு கணவன்மார் ஊதியம் வழங்க வேண்டும் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!

சீ
னாவில் இடம்பெற்ற ஆண்களை திக்குமுக்காட வைத்த நீதிமன்ற தீர்ப்பு ஒன்றே இங்கே பதியப்படுகிறது. சீன நபர் ஒருவர் அவரின் வீட்டில் அவரது மனைவி செய்த வீட்டு வேலைகளுக்காக அப்பெண்ணுக்கு மேற்படி நபர் ஊதியம் வழங்க வேண்டும் என நீதிமன்றமொன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

ஐந்து வருடகால வீட்டு வேலைகளுக்காக 50,000 சீன நாணயத்தை அப்பெண் பெறவுள்ளார்.

இப் பெண்ணும் குறித்த நபரும் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தனர்.
கடந்த வருடம் விவாகரத்துக்கு மனைவி விண்ணப்பித்தார் முதலில் விவாகரத்துக்கு தயக்கம் தெரிவித்த அப்பெண், பின்னர் தனது கணவனிடமிருந்து இழப்பீடு கோரினார்

வீட்டு வேலைகளிலோ தமது மகனை பராமரிப்பதிலோ கணவன் பங்காற்றவில்லை என மனைவி வாதாடினார்
இவ்வழக்கை விசாரித்த குறித்த நகரத்தின் நீதிமன்றமானது வீட்டில் மனைவி செய்த வேலைக்கக்காக 50,000 சீன நாணயம் (இலங்கை மதிப்பில் சுமார் 15 லட்சம்) வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அத்துடன் ஜீவனாம்சமாக மாதாந்தம் 2,000 யுபோன் (சுமார் 50,000 இலங்கை ரூபா,) வழங்க வேண்டும் எனவும் சென்னுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது

சீனாவில் இவ்வருடம் முதல் இச்சட்டம் அமுலுக்க வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கும் இந்நிலையில் புதிய சட்ட விதிகளின் கீழ் இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(மெட்ரோநியுஸ்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :