கொரோனாவுக்கும் கல்முனைவடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தலுக்கும் என்ன சம்பந்தம்?



ஊடகவியலாளர் மாநாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் கேள்வி?
காரைதீவு நிருபர் சகா-
கொரோனா அனர்த்தம் என கூறி மீள் குடியேற்றங்களை மேற்கொள்கின்றார்கள். பாராளுமன்றத்தை கூட்டுகின்றனர். அபிவிருத்தியை செய்கின்றனர்.ஆனால் கல்முனைன வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கொரோனா எவ்வாறு தடையாக உள்ளது என கேட்க விரும்புகின்றேன்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பினார்.
சமகால அரசியல் தொடர்பில் கல்முனையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்:

நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு எமது தமிழ்
பிரதிநிதித்துவதத்தை இழக்க செய்த கருணா அம்மான் என்பவரும் மட்டக்களப்பு மாவட்ட
நாடளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் என்பவரும் வெறும் பசப்புவார்த்தை பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர் .
இத்தேர்தல்களில் எமது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.இதில் தற்போதைய பிரதமரின் இணைப்பு செயலாளர் கருணா அம்மான் தேர்தல் முடிவுற்றதும் 3 மாதத்தினுள் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக வாக்குறுதி வழங்கி இருந்தார்.இது தவிர பிரதேச செயலகத்தை தரமுயர்த்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் அம்பாறை மாவட்டத்திற்கு இனி வர மாட்டேன் என கூறி இருந்தார்.
ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறைமாவட்டத்திற்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களை அநாதை ஆக்கி வாக்குறுதியை மீறி உள்ளார்.இவர் அம்பாறைக்கு வருகை தருகின்ற போது பொய் மூட்டைகளுடன் தான் வருகின்றார்.சொல்வதும் பொய் கூட.இவ்வாறு நாங்கள் கூறுவதற்கு காரணம் எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதனாலாகும்.
கருணா சொல்லுவது எல்லாம் மூட்டை மூட்டையாக பொய்.அவர் அம்பாறை மாவட்ட மக்களை அனாதை ஆக்கி இருக்கிறார்.
எமது நாட்டில் நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் .உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பல வகைகளில் சிதறடித்து இங்குள்ள மக்களை அனாதையாக்குகின்ற செயற்பாடு முடிந்து இன்று 03 மாதங்கள் கடந்துள்ளது. அந்தவகையில் கல்முனை வடக்கும் பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் விடயத்தில் பலர் பலவிதமான நடவடிக்கையை முன்னெடுத்தாலும் இன்று இவ் விடயம் தொடர்பாக கருத்துக்களோ அல்லது நாடளுமன்றத்தில் பேசுவதுமில்லை ஆனால் இவ் விடயம் தொடர்பாக தமிழ் தேசிய  கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் மாத்திரமே இன்று இது பற்றி நாடளுமன்றில் பேசிவருகிறார் .

ஆனால் இன்று ஆளும் கட்சியில் உள்ளவர்கள் எமது மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றுவாராக இருக்கட்டும் அல்லது எமது மக்களின் வாக்குகளை சிதறடித்து நாடாளுமன்றம் செல்லாதவராக இருக்கட்டும் இன்று இவர்களின் மெளனம் சாதித்து வருகின்றமை தமிழ் மக்களாகிய நாம் கவலையடைந்துள்ளோம்.
இவ் விடயம் பற்றி நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னவர்கள் பல அரசியல்வாதிகள் இன்று அவர்களுக்குள்ளே கருத்து முரண்பாடுகளை பகிர்ந்து கொண்டு வரு கின்றனர். இது மிகவும் வேதனையான விடயமாகும் ஆ னால் இன்று தமிழ் மக்கள் வடஇகிழக்கில் தமிழ் தேசிய
கூட்டமைப்பை நிராகரித்தது என்று கூற முடியாது .
இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு யாரும் எவருக்கும் தடையாக இருக்க தேவையில்லை.இவ்விடயம் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினையாகும்.முஸ்லீம் மக்கள் இவ்விடயத்தினால் பாதிக்கப்பட போவதில்லை.இதனூடாக முஸ்லீம் மக்களை அடக்கி ஆள வேண்டும் என்ற நோக்கம் அல்ல என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.இவ்விடயத்தை அரசியலாக்க அரசியல் வாதிகளே முயல்கின்றனர்.

முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி உண்ணாவிரதம் செய்த போது அங்கு கணக்காளர் நியமனம் தொடர்பில் ஆராயப்பட்டு பிரதேச செயலகத்திற்கு நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இன்னும் அதனை செய்வதற்கு பிரதமரின் இணைப்பு செயலாளர் கருணா அம்மான் மட்டக்களப்பில் உள்ள பிரதி அமைச்சர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையான் ஆகியோர் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுங்கள்.
இவ்விடயம் தொடர்பில் இனிவரும் காலங்களில் உண்ணாவிரதம் மேற்கொள்வது சிந்திக்க வேண்டியுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு செய்ய முடியாது.இருந்த போதிலும் அரசாங்கத்தடன் இணைந்துள்ள எமது அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் முக்கிய நடவடிக்கை எடுங்கள்.அதற்காக நாங்கள் உங்களை வழிநடத்துவோம்.இவ்வாறு செயற்பட தயங்குவார்களாயின் எதிர்காலத்தில் மக்கள் அவர்களுக்கு சரியான தீர்ப்பை வழங்குவார்கள்.எமது மக்களுக்காக உண்ணாவிரதமல்ல எந்தவொரு போராட்டத்தையும் மேற்கொள்ள தயாராக இருக்கின்றேன்.

ஊடகவியலாளர்கள் எப்போது கல்முனை பிரச்சினை தீரக்கப்படும் என கேள்வி கேட்கும் போது தமிழ் மக்களை முட்டாள் ஆக்கும் பதில்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.கொரோனா அனர்த்தம் முடிந்தால் தான் கல்முனை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக கூறியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :