20ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு பாராளுமனற்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்பையுடன் அங்கீகாரம்



20ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்பையுடன் நேற்று மாலை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன், ஆளுந்தரப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் ஆகியோரும் திருத்தத்திற்கு ஆதரவளித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இஷாக் ரஹ்மான், டயனா கமகே, எம்.எஸ்.தௌபீக், பைசல் காசிம், எச்.எம்.எம் ஹரீஸ், அ.அரவிந்தகுமார் ஆகியோரும் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
புத்தளம் மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முஸ்லிம் கூட்டணியில் தெரிவு செய்த அலி ஷப்ரி ரஹீமும் திருத்தத்திற்கு ஆதரவளித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தன.
குழு நிலை விவாதத்தின் போது, இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பிலான சரத்திற்கு தனியாக வாக்கெடுப்பு கோரப்பட்டது.சரத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் ஆதரவாக வாக்களித்தார்.
எவ்வாறாயினும், இறுதி வாக்கெடுப்பின்போது அவர் இருபதாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தார்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நசீர் அஹமட், பைசல் காசிம், M.S. தௌபிக் ஆகியோர் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இஷாக் ரஹ்மான், டயானா கமகே ஆகியோரும் இரண்டாவது திருத்தம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் ஆகியோர் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் எதிராக வாக்களித்தனர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
இதேவேளை பாராளுமன்றத்தில் 20ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்ப மீதான வாக்கெடுப்பிலும்;; மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்பட்டன.

திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :