வன்னியை போன்று சாய்ந்தமருதுக்கு ஏன் குழு நியமிக்கப்படவில்லை ? மு. காங்கிரசின் பெயரால் திண்டு ஏப்பமிட்டவர்களின் நிலை தொடர்வதா ?


டந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்ட மு. கா பிரமுகர்கள் கட்சிக்கு எதிராக நடந்துகொண்ட விதம் மற்றும் கட்சியின் தோல்வி பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக நான்கு பேர்கள் கொண்ட குழு ஒன்று நேற்று நடைபெற்ற அதி உயர்பீட கூட்டத்தில் நியமிக்கப்பட்டது.

இது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கின் அழுத்ததின் பேரிலேயே இந்த குழு நியமிக்கப்பட்டது.

2010 ஐ போன்று இம்முறையும் வன்னி மாவட்டத்தில் இரண்டு பிரதிநிதித்துவத்தை பெறமுடியும் என்ற நோக்கில் றிசாத் வதியுதீனுடன் இணைந்து மு.கா சார்பாக ஹுனைஸ் பாரூக் போட்டியிட்டார்.

ஆனால் வன்னி மாவட்ட மு.கா பிரமுகர்கள் பொதுஜன பெரமுன வேட்பாளரான காதர் மஸ்தானை வெற்றிபெற செய்வதற்காக உழைத்தனர். தங்களது கட்சிக்கு வேலை செய்திருந்தால் மு.காங்கிரசுக்கு இன்னுமொரு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும்.

மு.காங்கிரசை நாங்கள்தான் உருவாக்கினோம், வளர்த்தோம், கண்டுபிடித்தோம் என்று கூறிக்கொண்டு தங்களது வயிற்றை நிரப்பியவாறு ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு குழுக்கள் கட்சியை அழித்திக்கொண்டிருக்கிறது.

இது வன்னியிலும், சாய்ந்தமருதிலும் அதிகமாக உள்ளது. இந்த குழுக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இவர்களை தலைவர் மட்டுமே தனது தலையில் தூக்கிவைத்து ஆராத்தி எடுக்கின்றார்.

இதுபோல் சாய்ந்தமருதில் கடந்த சில வருடங்களாக மு.காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றி ஆராய்வதற்கு எந்தவித குழுவும் நியமிக்கப்படவில்லை. அதுபற்றி யாரும் அங்கு அழுத்த வழங்கவுமில்லை.

1988 தொடக்கம் 2015 வரைக்கும் மு.கா போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தொண்ணூறு வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கி வந்தார்கள்.

ஆனால் பள்ளிவாசல் தலைமையில் 2017 நவம்பரில் ஏற்பட்ட மக்கள் புரட்சிக்கு பின்பு முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்துவந்த ஆதரவுத்தளம் திடீரென தலைகீழாக மாறியது.

சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரசை தவிர வேறு எந்த கட்சி சார்பாகவும் வெற்றிபெற முடியாது என்ற நிலை இருந்தது.

ஆனால் சாய்ந்தமருதில் அரசியலில் ஆர்வம் உள்ளோர் எவருக்கும் மு.காங்கிரசில் இடம் இல்லை. கட்சியில் உள்வாங்கப்படவுமில்லை. நாங்களே கட்சியை கண்டுபிடித்தவர்கள் அதனால் நாங்களே அனைத்தையும் அனுபவிக்க தகுதியானவர்கள் என்பதை தவிர, கட்சியின் எதிர்கால வளர்ச்சி பற்றிய எந்தவித அக்கறையும் அவர்களிடம் இல்லை.

நற்பிட்டிமுனை, மாவடிப்பள்ளி, ஒலுவில் போன்ற சிறிய கிராமங்களில் உள்ள மத்தியகுளுக்களின் எண்ணிக்கையைவிட குறைந்தவர்களே தங்களை மத்தியகுழு என்று கூறிக்கொண்டு தலைவருக்கு தண்ணி காட்டிக்கொண்டு வருகின்றார்கள்.

சாய்ந்தமருதில் மு.காங்கிரசின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில் உள்ளது. அவர்கள் கீறுகின்ற கோட்டை தலைவர் தாண்டமாட்டார். கட்சி அழிந்தாலும் பருவாயில்லை. அந்த குடும்பமே தலைவருக்கு முக்கியம்.

இந்தநிலையில் ஜெமீல், சிறாஸ் மீராசாஹிப் போன்றவர்களுக்கு எவ்வாறு இடம் கிடைத்தது என்ற கேள்வி எழக்கூடும்.

இவர்கள் அங்குள்ள பிரமுகர்களின் இல்லங்களுக்கு சென்று பல லகரங்களில் பணத்தை அள்ளி வீசியதனாலேயே இடம் கிடைத்தது. பணம் வழங்காவிட்டால் அல்லது இந்த கட்டுரையாளர் போன்று பணம் இல்லாதவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.

எனவே தலைவரிடம் நாங்கள் எதை கூறினாலும் அவைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. இது எதிர்காலத்தில் கட்சியின் இருப்புக்கு ஆபத்தானது. அதை தவிர்க்க வன்னியில் குழு நியத்தது போன்று சாய்ந்தமருதுக்கும் குழு நியமிக்க வேண்டும். கட்சியின் பெயரால் வயிறு நிறைய திண்டு ஏப்பமிட்டு கட்சியை அழித்தவர்களை கட்சியைவிட்டு நீக்க வேண்டும்.

இது நடக்குமா ? நடக்காது.

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது -

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :