சாய்ந்தமருதுக்கு மாகாணசபையில் உச்ச அதிகாரம்! ஹக்கீம் வாக்குமூலம்!!!





சாய்ந்தமருது அதாவுல்லாவின் கோட்டை என்ற கனவு ஜெமீலால் தவிடுபொடியாக்கப்பட்டது! 

இந்தத் தேர்தலில் எங்கும் வாக்குறுதிகள் எதனையும் வழங்காத ஹக்கீம் ஜெமீலின் மாகாணசபை உச்ச அதிகாரத்தை மக்கள் மன்றில் உறுதிப்படுத்தினார்!! 

சாய்ந்தமருது மக்கள் சில அயலூர் அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்டதாலேயே கட்சி மீது மனச்சோர்வடைந்தனர் ஆனால் இப்போது மீண்டுவிட்டனர் என்றார் ஜெமீல்!!! 

அப்பிள் தோட்டத்தில் அலையலையாய் மக்கள்!!! 

உண்மையின் பக்கம் சாய்ந்தமருது மக்களை அணிதிரட்டக்கூடிய சக்தி ஜெமீலிடமுள்ளது நிரூபணமானது!!!! 

பொதுத்தேர்தலின் இறுதி தினமான 2020.08.02 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வருகைதந்து தாங்கள், தாங்களது இறுதிநேர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற இறுதிநேர பிரச்சார மேடைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் உரையாற்றியிருந்தார்.

சாய்ந்தமருது கடற்கரை வீதி, அப்பிள் தோட்ட வளாகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் அவர்களது தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் வரலாறுகாணா மக்கள் சமுத்திரத்துக்கு மத்தியில் உரையாற்றும்போதே ஹக்கீம், பல்வேறு உத்தரவாதங்களை வழங்கினார்.

சாய்ந்தமருது மண்ணுக்கு மாகாணசபை அந்தஸ்த்து, எவ்வித தங்குதடையும் இன்றி வழங்கப்படும் என்றும் அதேபோல் சாய்ந்தமருது மக்களுக்கு வாக்களித்த அவர்களது அபிலாஷையான உள்ளுராட்சிசபையை தலைமை என்ன விலைகொடுத்தாகினும் பெற்றுக்கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் இந்தகாலகட்டத்தில் தைரியமாக பேசக்கூடிய, யாருக்கும் அடிபணிந்து சேவகம் செய்யாத முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் தேவை என்றும் எதிர்வரும் பாராளமன்றத்தை பேரினவாதிகள் அவர்களுக்கு ஏற்றால்போல் செயற்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம் ஜனாசாக்கள் எரிக்கப்பட்டபோதும், முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய நெருக்குதல்கள் வந்தபோதும் மௌனமாக இருந்தவர்கள் நமது எதிர்கால சந்ததிகளுக்காக பேசுவார்களா? என மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் தனி நபர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சிகளுக்கு அடிபணிந்து விடாது, தேசிய ரீதியில் முஸ்லிம் சமூகம் பற்றி சிந்திக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின்கீழ் ஒன்றுபடுமாறும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரேயொரு மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நீங்கள் விரும்பும் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வின்போது கட்சியின் செயலாளர்நாயகம் நிசாம் காரியப்பர், தவிசாளர் அப்துல் மஜீத், வேட்பாளர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் எச்.எம்.எம்.ஹரீஸ்,பைசால் காசீம் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள் எம்.ஐ.மன்சூர், ஏ.எல்.நசீர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உள்ளிட்டவர்களுடன் உயர்பீட உறுப்பினர்கள், சாய்ந்தமருது அமைப்பாளர் மற்றும் கட்சியின் ஏனைய உயர்மட்ட அங்கத்தினர் எல்லாவற்றுக்கும் மேலாக மடைதிரண்ட வெள்ளம்போல் கட்சியின் ஆதரவாளர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :