*தொற்று நோய்கள் பற்றிய இஸ்லாத்தின் பார்வை*

முழு உலகத்தையும் பேய் கோலமாய் ஆட்டி பீதியையும்,அழிவையும் எல்லோர் மத்தியிலும் விதைத்து வருவதாக இன்று தொற்று நோய்கள் இருப்பதுடன் உலகை ஆழ நினைத்த வல்லரசுகள் கூட இந் நோய் காரணிகளினால் சிக்கி செய்வதறியாது நிலை குலைந்துள்ளன.

இனம் புரியாத பீதியையும் அழிவையும் இன்று எல்லோர் மத்தியிலும் விதைத்து உலகை உலுக்கி முழு உலகத்தையும் ஆட்டம் காணச் செய்துள்ளது.இந்த தொற்று நோய்கள் இன்று உலகை ஆழ நினைத்த வல்லரசுகள் கூட இதில் சிக்கி செய்வதறியாது நிலை குறைந்திருக்கிறது.

ஏபோலோவே, நிபா, வைரஸ், மெர்ஸ்(MERS, சாம்ஸ் (SARS) போன்றன உலகில் பேரழிவுகளை ஏற்படுத்திய தொற்று நோய்கள் என பட்டியலிடலாம்.இவற்றுடன் இன்று பரபரப்பாக மக்கள் மத்தியில் மரண பயத்தினையும், பீதியையும் COVID 19 SARS Cov-2 (Severely Acute Respiratory Sysndrome Corona Virus)கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ளது.

மனிதனுக்கு எல்லா காலங்களிலும் சகல துறைகளிலும் வழி காட்டக் கூடிய சாந்தியும், சமாதானமும் நிறைந்த இனிய மார்க்கம் ஆக இஸ்லாம் இருப்பதுடன் பல வருடங்களுக்கு முன்பே இவ் தொற்று நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டிருப்பதனையும் காணலாம்.
அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட சோதனை களமாக தொற்று நோய்கள் இருப்பதுடன் இறை நாட்டத்தின் படி இன்று இவ் உலகை உலுக்கும் பெரும் துன்பமாக மனித சமூகத்தில் இந்த தொற்று நோய் தொழிற்படுகிறது.இது ஈமானை பலப்படுதும் வகையில் அல்லாஹ்வின் ஓர் ஏற்பாடாகும்.எனவே இச் சோதனையில் இருந்து விடு பட அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்யவேண்டும்.

*"பொறுமை, மற்றும் தொழுகையின்
மூலம் இறைவனிடம் உதவி தேடுங்கள்."*
(10:87)

கண்ணுக்கு தெரியாத அற்ப வைரஸ் முழு மனித சமூகத்தையும் ஆட்டிப் படைக்கிறது.ஹலால், ஹராம் பேணி இறை விதிப்படி வாழ வேண்டும் என்பதையும் அல்லாஹ் விதித்தவை தவிர வேறு எதுவும் எங்களை அனுகாது என்பதையும் விளங்கலாம்.இன்னும் அல்லாஹ் நாடுவதனை எவராலும் தடுத்து நிறுத்தவோ, பிற் போடவோ முடியாது.அல்லாஹ்வின் நாட்டப்படி இந் நோயினால் தான் மரணம் என்றிருந்தால் அதனை யாராலும் தடுக்க முடியாது.

*நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் "நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி அறிந்து கொண்டால் அதில் இருந்து ஓடாதீர்கள்.அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் கேள்விபட்டால் அந் நிலத்திற்குள் நுழைய வேண்டாம். "( புகாரி )
*

இன்று நோய் அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களுக்கு செல்வதனை தவிர்குமாறும் ஊரிலேயே இத்தகைய நோய் நிலைமைகள் சுமூகமாகும் வரை இருக்க அரசு ஊர்களினையும் அப் பிரதேசங்களையும் Lock down செய்வதனை காணலாம். இது சுமார் பல வருடங்களுக்கு முன்பனரே நபிகளார் காட்டி தந்த வழி முறையாக உள்ளது. இன்னும் இது புதியதாக இஸ்லாத்தில் அறிமுகம் செய்த ஒன்றுமல்ல.நபிகளாரின் காலத்திலேயே இதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

இன்னும் இன்று தொற்றிலிருந்து விடுபட உபயோகிக்கும் உத்திகள் கூட பல வருடங்களுக்கு முன்னரே இஸ்லாத்தில் குறிப்பிடபட்டவையாகும்.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தும்மும் போதேல்லாம் தனது கையால் அல்லது ஒரு துணியால் வாயை மூடிக் கொள்வார்கள்"(திர்மிதி)

"சாப்பிட்டுவதற்கு முன்பும் சாப்பிட்டதற்கு பின்பும் உளுச் செய்து கொள்வது பரக்கத்திற்கு உரியதாகும்"( நூல் :திர்மிதி1846)
உலக இன்பங்களில் மூழ்கிய மனிதன் அல்லாஹ்வினை பற்றியும்,மரணத்தினைப் பற்றியும் நினைவின்றி கூத்துகளிலும், ஆடம்பர மோகம்,கேலிக்கைகளிலும் மூழ்கியிருக்க திடிரென இவ் அனைத்தையும் இல்லாமல் செய்வதாய் மற்றம் காண செய்துள்ளது.இன்று கொரோனா வைரஸ் உலகலாவிய ரீதியில் மரண பயத்தினை ஏற்படுத்தி உள்ளது.

இப் பீதியால் நெருங்கிய உறவுகளை விட்டும் வெறுண்டோடும் நிலையும்,எல்லோரை சந்தேகத்துடன் பார்கும் நினையும் தோன்றியுள்ளது.ஒன்றிணைந்து வாழவோ கைக்குளுக்கவோ, ஒருவர் அருகில் நிக்கவும் பயப்படும் நிலை உருவிகி உள்ளது. காரணம் நோய் கிருமிகளினால் தொற்றுகள் ஏற்படலாமோ என்ற மரண பீதியிலாகும். இவ்வாறு இன்று மனிதனது சகல செயற்பாடுகளையும்
இக் கொரனா தொற்றானது Lock Down செய்துள்ளது என்பதுடன் நம்மை வீட்டில் குடும்பத்துடன் இருக்கவும் எளிமையான வாழ்வு இறைவனுக்கு நன்றி செலுத்துவும் மன்னிப்பும்
உதவியுடம் தேடக்கூடிய ஓர் சந்தர்ப்பமாக இச் சூழ்நிலையினை
மாற்றி அமைக்க வேண்டும்.

"உங்கள் வீடுகளையே மஸ்ஜிதுகளாக ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலை நிறுத்துங்கள்"(10:87)

இன்று பொது ஒன்று கூடல்களை தவிர்த்தாலே இவ் வைரஸ் தொற்றினை குறைக்கலாம் என்று தனிமைப்படுத்தல் சகல விடயங்களிலும் நடைபொறுகிறது.இத்தகைய சூழலில் ஜமாத் ஜூம்ஆ தொழுகைகள் தடைபடினும் அவற்றை தவறாது நாம் தம் வீடுகளில் செய்ய கடமைப்படுகிறோம். இன்னும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வதும் எமது கடமையே
இதனால் பல உயிர்களை பாதுகாக்கவும் முடியும் இன்னும் அது ஓவ்வோர் தனி நபரினதும் பொறுப்பாயும் உள்ளது.

"எவரொருவர் ஒர் ஆன்மாவை வாழ வைக்கின்றாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரை போன்றாவார்" (அல் மாயிதா:32)

இவ் குர்ஆனிய வசனமும் தொற்று நோயிலிருந்து விடுபட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை பறை சாற்றுவதுடன் இக் காலப்பகுதியில் ஏற்படும் இன்னல் துன்பங்களில் போது பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் அனைவனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இன்று உலகிற்கு இறைவனின் இருப்பை மரண பயத்தின் மூலம் உணர்த்தியுள்ளது.
என்ன தான் வெறுண்டொடினாலும் இறை நியதி எதுவோ அதுவே நடக்கும்.அதில் எள்ளளவும் மாற்றம் நிகழாது என்பது தெளிவானது.

இத்தகைய மனித மனங்களில் ஏற்பட்டுள்ள இந்த சஞ்சலனங்களையும் தீர்ப்பவன் எம்மை படைத்து, போஷித்து,பரிபாலிப்பவனான அல்லாஹ் ஒருவனே.இக் கொடிய ஆட்சி கொல்லி நோயிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்வதுடன் அல்லாஹ் ஓர் சமூகத்தை அழிக்க நாடினால் எந்த வடிவாலும் அழிப்பான் என்பதுடன்.இறை நியதி எதுவோ அது எப்படியும் நிகழும் என்பதில் ஐயப்பாடில்லை.இத் தொற்று நோய் கற்று தந்த படிப்பினை ஏராளம் எனலாம். *"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்* *"* (3:185)என்பது திண்ணமாகும்.

*"வழித்தடம்" All University Muslim Student Association*
*F.F Nusra*
*South Eastern University of Sri Lanka*
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -