எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் எனது உளக்கிடக்கை.- எ.சி.எஹியாகான்


திர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான், தேசிய பிரதி பொருளாளராக இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலே எங்களது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றி பெறுவார் என்று நம்புகின்றேன்.

இந்த விடயத்தில் என்னிடம் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்தில் சுமார் 75000க்கு மேற்பட்ட வாக்குகளை வைத்திருக்கும் ஒரு பிரதான கட்சியாகும் அந்தக் கட்சியிலே இருக்கின்ற நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான மக்கள் ஹரீஸ் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்பது மிகவும் தெளிவாக தெரிந்த ஒரு விடயம்.

இந்த இடத்திலே நான் அவரை மனதார வாழ்த்துகின்றேன். அவரது குரல் பாராலமன்றத்திலே மீண்டும் ஒலிக்க படவேண்டும். கல்முனை மாநகரின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அதே போன்று எனது ஊரைச்சேர்ந்த பள்ளிவாசல் பிரேரணை செய்த எனது நண்பர் முன்னாள் பிரதேச செயலாளர் அவர்கள் பள்ளிவாசல்னால் தெரிவு செய்யப்பட்டு சாய்ந்தமருது சார்பாக வேறு ஒரு கட்சியில் போட்டியிடுகின்றார். அவரையும் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று நான் சாய்ந்தமருதை சேர்ந்த ஒருவர் என்ற அடிப்படையில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். என்பதை இந்த மக்களுக்கு தெரியப்படுத்துகிறேன். அத்தோடு எங்களது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெற்று வெற்றி பெறவேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

எனது கனவு எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த ஒரு கிழமையாக பல கட்சிகள் என்னை ஒப்பமிடுவதற்கு அழைத்தார்கள் பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவேண்டுமென்று. நான் யாருக்கும் இடையில் கழுத்தறுத்துவிட்டு செல்லும் பழக்கம் என்னிடத்தில் இல்லை என்பதனால் அவர்களின் அழைப்பை நிராகரித்துவிட்டு இருக்கும் இடத்தில் நிலையாக இருக்கிறேன்.

அன்புடன்


எ.சி.எஹியாகான்
தேசிய பிரதி பொருளாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -