கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்


2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகிறது நாடு முழுவதிலும் நாலாயிரத்து 987 மத்திய நிலையங்களில் நடைபெறும்; இந்தப் பரீட்சையில் ஏழு ,இலட்சத்து 17 ஆயிரத்து எட்டுப் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்
வரலாற்றிலேயே கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இம்முறையே ஆகக் கூடுதலான பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை அனுமதி அட்டையுடன் ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும். ,தற்கு மேலதிகமாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் புகைப்படத்தை உறுதி செய்து தனிப்பட்ட தரவுகளை உள்ளடக்கிய கடிதமும் ஏற்றுக் கொள்ளப்படும்.
பரீட்சைக்காக இம்முறை எட்டு விசேட மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மெகசீன் சிறைச்சாலை, மஹரகம அபெக்சா வைத்தியசாலை, ஹோமகம வட்டரெக்க நன்நடத்தை கைதிகளுக்காக சுனித்தா வித்தியாலயத்திலும் பரீட்சை நடைபெறுகிறது
விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்காக இரத்தமலானை ஊனமுற்றோருக்கான வித்தியாலயத்திலும், தங்காலை, சிலாபம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களிலும் விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் 7 மாணவர்களுக்காக காத்மண்டு நகரில் விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பதுளை - பஸ்ஸறை - நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில் கல்விப் பொதுத் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை அனர்த்த நிலையின் காரணமாக பரீட்சைக்கு தேற்றுவதில் இடையூறு இருக்குமாயின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவரச தொலைபேசி இலக்கமான 117 அல்லது கண்காணிப்பு உடனடி நடவடிக்கை (0773 957903)இ கண்காணிப்பிற்கு முன்னரான முன்னேற்பாடு (0773 957 898) அல்லது பிரதிப் பணிப்பாளருக்கு முன்கூட்டிய அறிவித்தல் (0772 320 530) ஆகிய இலக்கங்களுடன் தோடர்பு கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று சாதாரண தர பரீட்சை காலப்பகுதியில் செயற்படும் தேசிய உடனடி நடவடிக்கை பிரிவு இலக்கம் 0702 117117 / 0113 668 032 / 0113 668 028 / 0113 668 0289 / 0113 668 030 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -