புதிய தேசிய சாதனையை நிலைநாட்டிய வீரன் அய்மனுக்கு மகத்தான வரவேற்பு.



எச்.எம்.எம்.பர்ஸான்-
கில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டிகளில் குண்டெறிதல் போட்டியில் கிழக்கு மாகாணம் சார்பாக பங்குபற்றி தேசியத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் அய்மனுக்கு மகத்தான வரவேற்பு சனிக்கிழமை (02) அளிக்கப்பட்டது.
ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக நடைபெற்ற இவ் வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து குறித்த சாதனை மாணவனை வாகனத்தில் ஏற்றி வீதி ஊர்வலமாக ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களினூடாக பாடசாலையை சென்றடைந்தது.
பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், பாடசாலை நலன்விரும்பிகள், போன்றோர் கலந்து கொண்டனர்.

பதினான்கு வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையில் வெள்ளிக்கிழமை (1) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற குண்டெறிதல் போட்டியில் குறித்த மாணவன் இதற்கு முன்னர் 13.55 மீற்றர் தூரம் பதிவாகியிருந்த தேசிய சாதனையை 15.03 மீற்றர் தூரத்தை பதிவு செய்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.
குறித்த போட்டியில் தேசிய சாதனையினை நிலைநாட்டிய மாணவனுக்கும் மாணவனை பயிற்றுவித்த ஆசிரியர்களான ஆர்.ஆலோஜிதன், பீ.ரீ.பிரதீப், எம்.ஐ.பஹீம் ஆகியோர்களுக்கு பாடசாலையின் அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -