செல்லசாமிக்கு தெரியாத இ.தொ.கா வரலாறு கனகராஜுக்கு தெரியுமா? - திலகர் எம்பி கேள்வி

நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச காலத்தில்தான் மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக இ.தொகா முன்னாள் பொதுச் செயலாளர் சிரேஷ்ட அரசியல்வாதி எம்.எஸ்.செல்லச்சாமி உறுதிபட கூறுகின்ற வரலாற்றை, அப்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு எதிரான அரசியல் அணியில் இருந்து அவர்களை இறக்குமதி அரசியல் என விமர்சனம் செய்த கணபதி கனகராஜ் மறுப்பது வேடிக்கையானது என தமிழ் முற்போக்கு கூட்டணி யின் நுவரஎலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் ஹட்டன் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துரைக்கையில்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தடங்கல்களை ஏற்படுத்மியவர்கள் இப்போது அது வழங்கப்படுவதற்கான முயற்சி மேற்கொள்கின்ற போது வேறு புதுப் புரளிகளை கிளப்புகின்றனர். திறைசேரி 600 மில்லியன் ரூபா பணத்தொகையை தேயிலைச் சபைக்கு மாற்றியுள்ள நிலையில் நாம் பெருந்தோட்டத்துறை அமைச்சரிடம் அதனை எதிர்வரும் பத்தாம் திகதி சம்பலத்துடன் பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்ப கம்பெனிகளுக்கு வழங்க ஆவன செய்யுமாறு கோரியுள்ளோம். இது கிடைத்து விட்டால் மக்களிடத்தில் சென்று சொல்வதற்கு ஏற்ப இப்போது சுவரொட்டி ஒன்றைத் தூக்கிக் கொண்டு இந்தவார நாடகத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உருவாக்கமுன்னரே ஐ.தே க என ஒன்றாக இருந்த காலத்தில்
பறிக்கப்பட்ட வாக்குரிமைக்கு இரண்டு தரப்பினருமே பொறுப்பு கூற வேண்டும். அந்த
வகையில் முன்னாள் ஜனாதிபதிகள் ஜே.ஆர்.ஜயவர்தன , ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலங்களிலேயே முற்றாக தீர்க்கப்பட்டது. இவர்கள் ஐக்கிய தேசிய கட்சி தங்க தட்டில் வைத்து தரவில்லை தாங்கள்தான் போராடி வாங்கினார்கள் என்றால், கடந்த ஶ்ரீ லங்கா சுதந்திர ஆட்சிக் காலத்தில் சந்திரிக்கா அம்மையார் பெற்றுக் கொடுத்த தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை அதே ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மகிந்த
ஆட்சிக் காலத்தில் இல்லாமல் ஆக்கப்பட்ட போது போராடி பெறாது விட்டது ஏன். அவர்கள்
மக்கள் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்திருந்தால் மாடுகளுக்கு முக்கியத்துவம்
அளிக்கும் குடும்ப அமைச்சான கால்நடை அமைச்சையே வைத்துக்கொண்டு இருந்ததேன். அதனையும்
போராடி பெற்றிருக்கலாம்தானே. நாங்கள் 2015 ல் ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்துதான் அந்த மக்களுக்கான அமைச்சை மீளப்பெற்றோம்.

மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில்தான். தீர்வு காணப்பட்டதாக முன்னாள் இ.மொ.கா பொதுச் செயலாளர் சிரேஷ்ட அரசியல்வாதி எம்.எஸ்.செல்லச்சாமி ஊடக மாநாடு நடாத்தி கூறுகிறார். அவருடைய மகன் இ.தொ.கா உறுப்பினராக உள்ளபோதும் கூட அதனை கணக்கில் எடுக்காமல் ரணிசிங்க பிரேமதாச மகனுக்கு மலையக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என பகிரங்கமாக கூறுகின்றார்.அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் உரிய சந்தர்ப்பத்தில் வெளியே வந்து அதனைத் தெரிவிக்கிறார். எனவே இ.தொ.கா வின் செயற்பாட்டுக் காலத்தில் நடைபெற்ற விடயங்களுக்கு அந்த நாளில் பொறுப்பான பதவியில் இருந்த அவருக்கு இல்லாத உரிமையும் வரலாற்று உண்மையும் இப்போதைய இ.மொ.கா உப தலைவருக்கு எப்படி வந்தது என தெரியவில்லை.

அந்த நாட்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு எதிர் முகாமில் அரசியல் செயல்பாட்டில் இருந்தவர் கணகராஜ். மலையக மக்கள் முன்னணியில் இருந்த காலத்தில் அமைச்சர் சந்திரசேகரன் நம்பிக்கைக்காக தேசிய பட்டியலில் குறிப்பிட்ட பெயரை நயவஞ்சகமாக பின் வாயில் வழியாக சென்று சதாசிவத்தின் உதவியுடன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதனால் தான் மலையக மக்கள் முன்னணியை கைவிட்டு சதாசிவத்துடன் சேர்ந்தார் . அங்கிருந்து கொண்டு இ.தொ.கா செந்தில் தொண்டமான் என்பவரை தஞ்சாவூரில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக விமர்சனம் செய்தார். இப்போது அதே இ.தொ.காவில் இணைந்து கொண்டு இ.தொ.கா வரலாற்றைப் பேசுவதில் செல்லச் சாமியை விஞ்சப்பார்க்கிறார்.சுரொட்டி ஒன்றைத் தூக்கி கொண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும். ரணசிங்க பிரேமதாச படங்களைப் பிரசுரித்தது சஜித் பிரேமதாசவின் அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரும் அந்த சுவரொட்டிகளை அச்சிட்டதாக அவதூறு பிரசாரம் செய்துவருகிறார்.

அத்தகைய ஆதரவுகளை வழங்கும் இ.தொ.கா வின் முன்னாள் உறுப்பினர்கள் எம். எஸ். செல்லச்சாமி , ஆர். யோகராஜன் போன்றவர்கள் இன்று சஜித் பிரேமதாச வுக்கு ஆதரவு வழங குகிறார்கள். அவர்களுக்கும் அந்த தார்மீக உரிமைகள் உண்டு என்பதையே செல்லசாமி யின் கூற்றாக அமைகிறது. தவிரவும் அத்தகைய சுவரொட்டிகளை ஒட்டும். தேவை எமக்கில்லை. எமக்கு கொள்கை கோட்பாட்டில் தெளிவு இருக்கிறது. ரமேஷ் மத்திய மாகாண அமைச்சராக இருந்து சாகித்ய விழாவை நடாத்தியபோது பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் படத்தையும், ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவையும், அப்போது எதிராளியாக அவர்கள் சித்தரித்த மைத்ரிபால சிரிசேன படத்தை ஆறே மாதத்தில் தமது பொதுத் தேர்தலில் தமது தலைக்கு மேலே அவர்களின் அய்யா படத்துடன் போட்டுக் கொண்டவர்கள் அவர்கள்தான். எனவே .இ.தொ.கா காரர்கள். தான் அய்யா படத்தை அடிக்கடி ஆளை மாற்றி மாற்றி போட்டு போஸ்டர் அடித்துக் கொண்டார் களே தவிர நாங்கள் இல்லை என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -