சம்மாந்துறையில் மீண்டும் காட்டு யானைகள் தாக்குதல் -காயமடைந்தவர் மரணம் -உடமைகளும் சேதம்

பாறுக் ஷிஹான்-
ம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒடங்கா-2 பகுதியில் தனியான் காட்டு யானை ஒன்று பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகாலை திடிரென தாக்குதல் நடாத்தியுள்ளது.
சனிக்கிழமை (7) அதிகாலை இவ்வாறு உள்நுழைந்த பெரிய தனியான் யானை அங்குள்ள வீடுகளின் சுவர்களை உடைத்து சேதமாக்கியுள்ளதுடன் நெற்களஞ்சியத்திற்கும் கடும் சேதங்களை ஏற்படுத்தி தப்பி சென்றுள்ளது.
மேலும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் கல்லிரைச்சல் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் படுகாயமடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏ.அமீர் என்ற நபரும் இன்று உயிரிழந்தள்ளார்.
மேலும் இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு உள்ளான வீட்டு மதில்கள் சேதமடைந்த நெற்களஞ்சிய பகுதிகளை பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இது தவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடங்களை சுற்றி 50க்கும் அதிகமான யானை கூட்டங்கள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கையில்
குறிப்பாக இவ் யானை அடிக்கடி எங்கள் பிரதேங்களுக்கு வருகின்றன.இதனால் எங்களுக்கு அச்ச நிலை காணப்படுகிறது சொத்துக்களுக்கு சேதங்கள் இடம்பெறுகின்றது .இது விடயத்தில் உரிய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.
இது தவிர கடந்த சில தினங்களுக்கு முன்னரும் நிந்தவூர் பகுதிகளிலும் யானைகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -