மதுபோதையில்வரும் வாகனசாரதிகளுக்கு கைவிலங்கிட்டு இழுத்துச்செல்ல பொலிசாருக்கு அனுமதிகொடுத்தது யார்?

வாழ்க்கையில் மதுவைத்தொடாதவர்களுக்கும் தண்டமா?
காரைதீவு பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் மோகனதாஸ் சீற்றம்!
காரைதீவு நிருபர்சகா-

துபோதையில்வரும் வாகனசாரதிகளைப் பிடித்தால் சட்டப்படி நீதிமன்றில் ஒப்படைத்து தண்டனைபெற்றுக்கொடுக்கலாம். ஆனால் அவர்களுக்கு விலங்கிட்டு திருடனைப்போல் இழுத்துச்செல்வதற்கு பொலிசாருக்கு அனுமதி வழங்கியது யார்?
இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் 19வது மாதாந்த அமர்வில் உரையாற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் த.மோகனதாஸ் சீற்றத்துடன் கேள்வியெழுப்பினார்.
மேற்படி அமர்வு தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நேற்று(9) சபாமண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய த.மோகனதாஸ் மேலும் கூறுகையில்:
அண்மைக்காலமாக காரைதீவு உள்வீதிகளில் பலர் இவ்விதம் கையைக்கட்டி அல்லது கைவிலங்கிட்டு இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர். மனிதஉரிமைகளை மீறும் இப்பொலிசாருக்கெதிராக நடவடிக்கைஎடுக்கவேண்டும்.
ஊருக்குள் இருக்கின்ற ஆலயத்திற்கு பள்ளிவாசலுக்கு வைத்தியசாலைகளுக்கு அவசரத்திற்கு செல்ல முடியமாலுள்ளது. திடீரென ஹெல்மட் கேட்டு தண்டம் அடிக்கிறார்கள்.இதனால் மக்கள் ஆலயங்களுக்கு சுதந்திரமாகச் செல்லமுடியாதுள்ளனர்.
ஹெல்மெட் அணிந்து செல்வது மக்களுக்குத்தான் பாதுகாப்பு.மது போதையில் வாகனமோட்டுவதும் குற்றம்தான். எனினும் சிலவேளைகளில் மனிதாபிமானத்துடன் பொலிசார் நடந்துகொள்ளவேண்டும்.
தண்டம் விதிக்க உரியசட்டமுறைப்படி அணுகவேண்டும். அதைவிடுத்து கொலைக்குற்றம் செய்தவனைப்போல் கையைக்கட்டி அல்லது கைவிலங்கிட்டு இழுத்துச்செல்வதை யாரும் அனுமதிக்கமுடியாது. இது அப்பட்டமான மனிதஉரிமை மீறல். விலங்குகளைக்கூட அப்படி இழுத்துச்செல்லமுடியாது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துபொலிசாரின் தலைமைஅதிகாரிக்கு அறிவித்து இவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது தொடர்பில் பேசிய மற்றுமொரு சுயேச்சைக்குழு உறுப்பினர் இ.மோகன் கூறியதாவது:
வாழ்க்கையில் மதுவை நினைத்துக்கூடப் பார்க்காதவர்களுக்கு மதுபோதையில் மோட்டார்சைக்கிள் செலுத்தியதாகக்குற்றம் சுமத்திபல்லாயிரம் ருபாவை தண்டமாகக் கட்டவைக்கப்பட்டுள்ள சம்பவம் அண்மையில் இருவருக்கு நடந்துள்ளது.
ஏலவே மதுபோதையில் வந்த ஒருவர் ஊதிய பலூனை குறித்த மதுவைத்தொடாதவரிடம் கொடுத்து ஊதவைத்து இக்குற்றத்தை வலுக்கட்டாயப்படுத்தி ஏற்கவைத்து நீதிமன்றில் நிறுத்திப ல்லாயிரம் ருபாக்களை கறந்துவருகின்றார்கள்.அண்மையில் காரைதீவில் ஒருவர் இவ்வாறு 42ஆயிரம் ருபா செலுத்தியுள்ளார்.
மற்றது கைகளைக்கட்டி அழைத்துச்செல்வதற்கு அவர்கள் என்ன குற்றவாளியா? அவர்கள் குற்றவாளியா இல்லையா என்பதனை நீதிமன்று தீர்மானிக்கவேண்;டும். பிரதேசத்திற்கு ஒரு சட்டமா? ஆலயங்களுக்கு ஹெல்மெட் இன்றி நிம்மதியாகச்செல்லமுடியாதுள்ளது. ஆனால் ஏனையோர் சுதந்திரமாகச் செல்கிறார்கள். சட்டமென்றால்அனைவருக்கும் பொதுவாகஇருக்கவேண்டும். என்றார்.
உதவித்தவிசாளர் எம்.ஏ.ஜாகீர் உரையாற்றுகையில்:
எனது வீட்டிற்கு அருகில் இயலாத ஒருவர் சலூனுக்குச்சென்று முடிவெட்டிவிட்டு கஸ்ட்டப்பட்டு எனது உறவினரொருவரின் மோட்டார்சைக்கிளில் ஏறிஒரு நிமிடம்கூட இல்லை.அங்குவந்த பொலிசார் அவரைப்பிடித்து 1000ருபா தண்டம் கட்டவைத்துள்ளனர்.
அது சட்டம். காரைதீவில் மட்டுமல்ல சகலபிரதேசங்களிலும் இது நடக்கிறது.எனவே பொலிசாருடன்பேசி தீர்வுகாணுங்கள்.

எமது கௌரவ உறுப்பினர்கள் பிரதேசசெயலகத்திற்குச்செல்லும் போது அங்குள்ளவர்கள் உரியமதிப்பளிப்பதில்லை எனப்பலரும் குற்றம்சாட்டுகின்றனர். காரைதீவு பிரதேசசெயலாளர் திறமையானவர் தரமானவர். அவருக்குக்கீழ் பல பிரிவுகள் உள்ளன. அங்கிருப்பவர்கள் அனைவரையும் குறைகூறமுடியாது. ஒரு சிலர் எமது கௌரவ உறுப்பினர்களை மதிப்பதில்லை. அவ்வளவுதான. இதுவிடயத்தை பிரதேசசெயலரிடம் தவிசாளர் பவ்யமாக எடுத்துக்கூறவேண்டும்.மாளி;கைக்காட்டிற்குள் முறையற்ற விதத்தில் வீதியொன்று போடப்படுகிறது.அதனைத் தவிசாளர் கண்காணிக்கவேண்டும். என்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் முத்து. காண்டீபன் உரையாற்றுகையில்:
ஒருமனிதனின் இறுதிஊர்வலமென்ப து கௌரவமாக நடாத்தப்படவேண்டும். எமது பிரேதஊர்தி பழமையாகிவிட்டது. எனவே புதிதாக வாகனமொன்றை வாங்கி புதியமுறையில் வடிவமைத்து அதனை மக்களுக்கு வழங்கவேண்டும். எனது கட்சியில் அது கிடைக்காது. எனவே எமது சபையால் வாங்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்றார்.

இறுதியாக தவிசாளர் கி.ஜெயசிறில் உரையாற்றுகையில்:
காரைதீவிற்குள் போக்குவரத்துப்பொலிசாரின் அட்டகாசம் தொடர்பாக கௌரவஉறுப்பினர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். சட்டம் இருக்கிறது எனினும் பொலிசாரும் மனிதாபிமானத்துடன் சிலவேளைகளில் செயற்படவேண்டும். இதனை நான் சம்மாந்துறைப்பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்து தீர்வு காணலாமெனநம்புகிறேன்.

அடுத்து பிரேதவாகனம் தொடர்பானது. எமது பிரேதஊர்தி 10வருடத்திற்குள் மேலாக பழைமையானது. அதனைத்திருத்த 1லட்சத்து 95ஆயிரம் ருபா தேவைப்படுகிறது. எமக்கு விற்றவாகனக்காசு 18லட்சருபா வரவிருக்கிறது. எமது மகேந்திரா ஜீப்பை பிரேதவாகனமாக்கி ஒருசிலவருடங்கள் பயன்படுத்தலாம். எனினும் எமது வரவுசெலவுத்திட்டத்தில் 20லட்சருபாவை இதற்கென ஒதுக்கி புதிய வாகனத்தை வாங்கி மக்களுக்கு வழங்க அனைத்துஉறுப்பினர்களும் ஒத்துழைப்புநல்குவீர்களென எதிர்பார்க்கின்றேன்.

காரைதீவுக்குள் நிலையான அபிவிருத்திக்கு மாத்திரமே அனுமதிவழங்கமுடியும். நிலையில்லா அபிவிருத்திக்கு ஒருபோதும் துணைபோகமாட்டோம்.அண்மையில் எமது அனுமதியில்லாமல் வீதிஅபிவிருத்தித்திணைக்களம் கொங்கிறீட்வீதியமைக்கமுற்பட்டது மட்டுமல்லாமல் அங்குநின்ற தொழினுட்ப அலுவலர் தவிசாளர் என்ன பெரியாளா? என்று கேட்டு அவமானப்படுத்தியுள்ளார். எனக்குத் தகவல்எட்டியதும் நான்அங்குசென்று வேலையை நிறுத்தினேன். பின்பு வழிக்குவந்தார்கள். நாம் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள்.

உங்கள் பகுதிகளில் நடக்கும் அத்தனை வேலைகளையும் கண்காணிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. பிழையாக நடந்தால் தட்டிக் கேளுங்கள். நிறுத்துங்கள். இல்லாவிடில்எனக்கு அறிவியுங்கள்.என்றார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -