Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected] Admin-message
Headlines
Loading...
Admin-message

தெற்காசியாவில் உள்ள மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரே கலாநிதி ஹிஸ்புழ்ழா; அவர் ஜனாதிபதி வேட்பாளராவதையே விரும்புகின்றோம்!--வஃபா பாறுக்


டைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் இரண்டாவது தெரிவு வாக்குகளை தனித்துவ அடையாளத்துடன் பெறுமதி மிக்கதாக ஆக்கிக்கொள்வதற்கு ஒரு முஸ்லிம் வேட்பாளரை களமிறக்குவதிலுள்ள சாதக, பாதகங்களை கலந்துரையாடும் நிகழ்வொன்று நேற்று 06/09/2019 பிற்பகல் நடைபெற்றதுஏற்பாட்டுக்குழுவின் அழைப்பை ஏற்று நாமும் அந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டோம்.
நிகழ்சி சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கிழக்கு மாகாண முன்னால் ஆளுனர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்களும் கலந்து கொண்டார்.

முஸ்லிம்களின் முதலாவது வாக்கை முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்கி இரண்டாவது வாக்கை சமூகத்தின் பாதுகாப்பு, இதர அபிலாஷைகளை கவனத்தில் கொண்டு செயல்படக்கூடிய, வெற்றி பெற வாய்ப்புள்ள ஒரு வேட்பாளருக்கு வளங்குவதினூடாக முஸ்லிம் வாக்குகளின் பெறுமானத்தை அதிகரிக்கலாமா என்பதை அறிந்து கொள்ளவே இத்தகைய சந்திப்புக்களை நடாத்திக்கொண்டு வருகின்றோம் என கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் தனது எண்ணக்கருவை அறிமுகம் செய்து உரையாடலை ஆரம்பித்து வைத்தார்.

இம்முன்னெடுப்பினூடாக எதிர்பார்க்கும் சமூகப்பயன்களையும் இதை முன்னெடுப்பதிலுள்ள சிரமங்களையும் சமமாக அலசிக்காட்டினார்.
நேரடியாக பெரும்பான்மை வேட்பாளருக்கு வாக்களிப்பதினால் ஏற்படக்கூடிய நன்மைகளுக்கு மேலதிகமான பயனை அடைந்து கொள்வதற்கு முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குதல் எவ்வாறு உதவும் என்பதையும் சிறப்பான முறையில் விளக்கினார்.

கேள்வி-பதில் வடிவிலமைந்த இவ்வுரையாடலில் பல விடையங்கள் பேசப்பட்டன.
எல்லோரும் போலவே தானும் இந்த எண்ணக்கருவின் சாதக-பாதங்களை இன்னும் அதிகமாக விளங்கிக்கொள்ளவே இவ்வாறான கலந்துரையாடலை சில வாரங்களாக செய்து வருகின்றேன் என்று கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்.
கலாநிதி ஹிஸ்புழ்ழாஹவின்'இரண்டாம் தெரிவுக்கு வலுச்சேர்க்கும்' எண்ணக்கருவுக்கு ஆதரவளிப்பதால் எந்த நஷ்டமும் முஸ்லிம் சமூகத்துக்கு வரமாட்டாது, சில நன்மைகள் கிடைக்க வாய்ப்புகளும் உண்டு என்ற முடிவுக்கு வருவதில் சிரமம் இருக்கவில்லை.
கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ்வின் கருத்துக்களிலிருத்து ஒன்றை புரியமுடிந்தது.
வெற்றி பெற வாய்ப்புள்ள இரண்டு வேட்பாளர்களில் ஒருவருக்கு முஸ்லிம்களின் 25% வாக்குகளையாவது ஒன்றாக இணைந்து வழங்கி வெற்றியின் இறுதி உரிமையாளர்களான அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்க முனைகின்றார்.
இந்த புள்ளியிலேயே எமது பார்வை சற்று வித்தியாசப்படுகிறது.
நிட்சயமாக முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கமாட்டார் என்று எந்த வேட்பாளரையும் அடையாளப்படுத்தி 100% உத்தரவாதம் அளிப்பது சாத்தியமில்லை என்பதையும் தாமாகவே ஏற்றுக்கொள்ளும் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் ஏன் ஒரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் முன்னெடுப்பாய் இதை சுருக்க வேண்டும்?
நிலமைகளை அவதானித்து எமது கருத்துக்களையும் கூறுவோம். அதற்கு மாறுபட்ட தேர்வை விரும்புவோர் அந்த வேட்பாளருக்கும் வாக்களியுங்கள். அதனால் எதுவும் குறையப்போவதில்லை,
ஆனால் முதலாவது வாக்கை முஸ்லிம் வேட்பாளருக்கு அளியுங்கள் என்ற விரிவாக்கத்தை செய்தால் அனைத்து முஸ்லிம் வாக்குகளையும் ஒன்று சேர்த்து வெற்றிக்கு சாத்தியமான வாக்காளர்கள் இருவரில் எவர் வெற்றி பெற்றாலும் முஸ்லிமளின் வாக்குகள் தனியாக அடையாளப்படும்.
50+1 தேவைப்படும் இருவரின் எவர் வெற்றி பெற்றாலும் முஸ்லிம்களின் வாக்குகள் தனியாக அடையாளப்படும்.
அதற்காக இரண்டாம் தெரிவை யாருக்காவது போடுங்கள் முதலாவது வாக்கை மட்டும் முஸ்லிம் வேட்பாளருக்கு அளியுங்கள் என்ற திறந்த தேர்வை கொள்கையாக கொண்டு செல்ல முடியாது
அதில் தர்க்க நியாயம் இருக்காது.
தனது பார்வையில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடியவர் என கருதும் வெற்றியடைய வாய்ப்புள்ள வேட்பாளரை உரிய வேளையில் கட்டாயமாய் முன்மொழிய வேண்டும்.அது இந்த எண்ணக்கருவின் பிரதான பின் புலம்.ஆனாலும் நியாயமான உளவியல் காரணங்களுக்காக மாற்றுத்தெரிவின் மீது நாட்டமுள்ளோரின் வாக்குகளையும் புறக்கணிக்காமல் அவற்றையும் ஒன்று சேர்த்து முஸ்லிம் வாக்காளர்களை ஓரணியில் திரட்டும் பணியும் இணைந்தே நிறைவேறவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.
கோத்தாவை ஆதரிப்போரும் ரணில்/சஜித்/கருவை ஆதரிப்போரும் தமது முதல் வாக்கை முஸ்லிம் வேட்பாளருக்கு வளங்க வேண்டும் என்ற வகையில் இலக்கை இன்னும் வியாபித்தால் எந்த வேட்பாளரின் வெற்றிக்கும் முஸ்லிம் வாக்குகள் உரிமை கோரலாம்.
முஸ்லிம் வாக்குகளின் பெறுமானத்தை மேலும் அதிகரிக்கலாம்.
அடுத்து இக்கலந்துரையாடலில் பொதுவாக பரிமாறப்பட்ட கருத்துத்தான் முஸ்லிம்கள் சார்பாக கலாநிதி ஹிஸ்ப்ழ்ழாஹ்வே களமிறங்கவேண்டும் என்பதாகும்.
தெற்காசியாவில் உள்ள மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கலாநிதி ஹிஸ்புழ்ழாவை விட சிறந்த முஸ்லிம் வேட்பாளர் இலங்கையில் இப்போதைக்கு இல்லை என்பது எமது கருத்து.
ஹிஸ்புழ்ழாஹ் வேட்பாளராவதையே நாமும் விரும்புகின்றோம்
இனவாதம் அரசியலாகியுள்ள நாட்டில் ஹிஸ்புழ்ழாஹ் போன்ற சர்ச்சைக்குரியவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தவுடன் உண்ணா விரதங்களும் சத்தியாக்கிரகங்களும் தலை தூக்கவும் வாய்ப்புண்டு.
அவ்வாறு நடத்தால் அது பீதியை கிழப்பும்,ஆனால் அதன் எதிர் விளைவு முஸ்லிம்களுக்கு சாதகமாகவே அமையும்.
முஸ்லிம்கள் மீதான சந்தேகங்களையும் குற்றச்சாட்டுக்களையும் பொய்பிக்கும் பிரச்சாரத்தை அழகாக வடிவமைத்து முன்னெடுக்கும் வாய்ப்பாக அது மாறும். இன்னும் இவ்விடையத்தில் பேச நிறையவுண்டு. பேசுவோம் 50+ எனும் இலக்கை பூர்த்தி செய்வதற்கான இந்த வழிமுறையை நாம் ஏற்றுக்கொண்டாலும் ஒட்டுமொத்த மாற்றத்துக்கான #MPP க்கான எமது ஆதரவு தொடரும்  நாம் நபர்களை தேர்வதைவிட புதிய சிந்தனைக்கே முன்னுரிமை கொடுக்க விரும்புகின்றோம் #MPP யால் இந்நாட்டு அரசியல், சமூக மாற்றங்களை கொண்டுவர இயலும் என்பது எமது நம்பிக்கை.
#MPP வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்புண்டா என்று கேட்டால்; ஆம் அவர்தான் அதிக வாக்குகளை பெறுவார்.என்பதில் எமக்கு சந்தேகமில்லை.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.