இலங்கையில் 15 - 19 வயதுக்கு இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு


ஐ. ஏ. காதிர் கான்-
லங்கையில் 15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில், கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளதாக, பொரளை - காசல் வீதி, மகளிர் மருத்துவமனையின் விசேட நிபுணர் டாக்டர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரம் கருக்கலைப்புக்கள் நிகழ்ந்துவரும் நிலையில்,
கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களை ஆராய்ந்தால், 15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியிலேயே கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளதாகவும் டாக்டர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரிப்பதும், பிள்ளை பெறுவதும் பிரச்சினைகளுக்குரிய விடயமாகும். இதற்காக அரசாங்கத்திற்கு, கூடுதலான தொகையை செலவழிக்க நேர்ந்துள்ளது என்றும் டாக்டர் தெரிவித்துள்ளார்.
குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சிறப்பு நிபுணர் டாக்டர் சஞ்சீவ கொடகந்த கருத்து வெளியிடுகையில், குடும்பத்திட்டமிடல் மூலம் அனாவசிய கர்ப்பங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சனத்தொகையும் வெகு சீக்கிரமாக அதிகரிப்பதால், குடும்பக் கட்டுப்பாடு குறித்தும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், குடும்பத் திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு நிபுணர் டாக்டர் கீதாஞ்சலி மாபிட்டிகம சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -