மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை கண்டறிந்த சிறுவன்..!

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மிகவும் தீவிரமான, மருந்து களுக்கு கட்டுப்படாத மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார். பொதுவாக மார்பக புற்றுநோய் உருவாவதற்கு ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் உள்ளிட்ட ஹார் மோன்கள் காரணமாக உள்ளன. இதைத் தொடக்கத்திலேயே கண் டறிந்துவிட்டால், இந்த புற்று நோய் செல்கள் வளர்வதை டமோக்சி பென் உள்ளிட்ட மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

எனினும், 3 (ட்ரிபிள்) எதிர்மறை மார்பக புற்றுநோயை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி ஆகியவை அடங்கிய கூட்டு மருத்துவ முறை யில்தான் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த முறைகளில் நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு. இந்நிலையில், இந்த வகை புற்றுநோய்க்கான சிகிச்சை முறையை இந்திய வம்சா வளியைச் சேர்ந்த கிர்தின் நித்தியானந்தம் (16) கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “மருந்துக்கு கட்டுப்படாத புற்று நோய்களை மருந்துகளுக்கு கட்டுப் பட வைக்கும் சிகிச்சை முறையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டு வருகிறேன். இதன் பலனாக, இதுவரை மருந்துகளுக்கு கட்டுப் படாமல் இருந்த எதிர்மறை மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறை யைக் கண்டுபிடித்துள்ளேன். குறிப் பாக, இந்த வகை புற்றுநோய்க்கு காரணமாக உள்ள ஐடி4 புரதத்தை உருவாக்கும் மரபணுக்களை அழிப்பதற்கான வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளேன்” என்றார்.

மனநிலை பாதிப்பு (அல்ஸீமர்) நோயை முன்கூட்டியே கண்டறியும் சோதனை முறையைக் கண்டுபிடித்ததற்காக கடந்த ஆண்டு கூகுள் அறிவியல் கண்காட்சி விருது இவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -