அல் குர்-ஆனை அர்த்தமாக ஓதுவதற்கு தஜ்வீத் சட்டங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன - அமைச்சர் நஸீர்

சப்னி அகமட்-
ல் குர்-ஆனை தெளிவாகவும் அர்த்தமாகவும் ஓதுவதற்கு தஜ்வீத் சட்டங்களுடனான புத்த வெளியீடுகள் முக்கிய பங்கை வகிக்கின்றதுடன் இன்னும் ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் தெரிவித்தார். இஸ்லாமிய அழைப்பு மையம் ஏற்பாடு செய்த அல்-ஹாபீழ், மௌலவி என்.எம். அப்துல் அஹத் (ஷர்கி) எழுதிய 'தஜ்வீத் சட்டங்கள்' நூல் வெளியீட்டு விழா நேற்று (28) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் 

நபி நாயகம் காட்டிய வழியை நாம் அனைவரும் முழுமையாக பேணவேண்டிய கட்டாயக்கடமை எம்மிடம் உள்ளது.அதில் ஒன்று தான் குர் -ஆனை அர்த்தமாகவும் தெளிவாகவும் ஓதவேண்டியது ஒவ்வொருவருடையதும் கடமை அனால் அதுவெல்லாம் இன்று திசைமாறி செல்கின்ற போது அதை நாம் சீர்செய்ய இவ்வாறான புத்த வெளியீடுகளை மேற்கொண்டு அதனை ஒவ்வொருவரின் கைக்கும் வழங்கி கற்கக் கூடிய ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

அதிலும் குறிப்பாக தஜ்வீத் சட்டங்களுடன் இன்றைய சந்ததியினர் அக்கறை செலுத்தி ஓதுவதற்கு இவ்வாறான அமைப்புக்களும்,மெளலவிகளும் அதிகமாக உதவி செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -