இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்க போராடுகின்றவர்கள் பயங்கரவாதிகளா? பாகம்2


தொடர்ச்சி ...............2

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

பல மனிதப்படுகொலைகளை புரிந்த அரச பயங்கரவாதிகளை ஜனநாயக குடியரசு என்ரால்  இழந்த இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்க போராடுகின்றவர்கள் பயங்கரவாதிகளா ?
ஐ. எஸ் அமைப்பினருக்கு உலக அளவில் ஆதரவு வந்துவிடக்கூடாது என்பதில் மேற்குலகம்  கவனமாக செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஐ. எஸ் அமைப்பினரால் தங்களது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள குற்றவாளிகளுக்கு அல்லது துரோகிகளுக்கு தண்டனை வழங்குகின்றபோது, வெளிப்படையாக உலக மக்களுக்கு காண்பிக்கும் வகையிலேயே அத்தண்டனைகளை வழங்குகின்றார்கள். இதனை மேற்குலக ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக கையாள்கின்றது.
ஐ. எஸ் அமைப்பினர்களை ஒரு கொலைகாரர்களாகவும், வன்புணர்வு மிக்கவர்களாகவும், பயங்கரவாதிகளாகவும், உலக அமைதிக்கு எதிரான ஆபத்தானவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றார்கள். இதனையே உலக மக்களும் நம்புகின்றார்கள்.
ஆனால் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்திய தாதிமார்கள் சிலர் ஐ. எஸ் அமைப்பினரால் ஈராக்கில் சிறை பிடிக்கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டனர். தங்களது தாய்நாட்டுக்கு திரும்பி வந்த அவர்கள் ஐ. எஸ் அமைப்பினர்களை புகழ்ந்து இந்திய ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர்.
அதில் போராளிகளினால் தாங்கள் கௌரவமாக நடத்தப்பட்டதாகவும், பெண்கள் என்ற வகையில் அவர்கள் தங்களை சகோதரிகள் போன்று உபசரித்ததாகவும் கூறிய பேட்டிகள் இந்திய ஊடகங்கள் வாயிலாக ஒலி, ஒளி பரப்பப்பட்டது. இந்த பேட்டியினை மேற்கு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக இதனை இருட்டடிப்பு செய்வதிலேயே கவனமாக இருந்தனர். இதன் மூலம் மேற்குலக ஊடகங்கள் தங்களது இலக்கில் தற்காலிக வெற்றியினை அடைந்துவருகின்றது.
ஐ. எஸ் அமைப்பினர் நினைத்தால் தங்களுக்கு எதிரான பிரச்சாரத்தினை முறியடிக்கும் நோக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு தண்டனையையும் வெளியுலகுக்கு கான்பிக்காதவாறு செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் பசுந்தோல் போத்திய புலி போன்று வேஷம் தரிக்கும்  போலி ஜனநாயக வாதிகளல்ல என்பது புலனாகின்றது.
எந்தவொரு ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கமும் அரசியல் கட்சியினை போலல்லாது இராணுவ நலன் சார்ந்த இறுக்கமான கட்டுப்பாடுகளையும், சட்ட திட்டங்களையும் கொண்டிருக்கும். அங்கு ஜனநாயக மரபுகளை எதிர்பார்க்க முடியாது.  அப்படி இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டிருக்காவிட்டால் கட்டுக்கோப்பான போராளிகளை உருவாக்க முடியாது. போராளிகள் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர கேள்வி கேட்பவர்களாக இருக்க முடியாது.      
உலகின் பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் தங்களை ஜனநாயகவாதிகள் என்றும், ஜனநாயக நாடு என்றும் தோற்றப்பாட்டை உலகிற்கு காண்பித்துக்கொண்டு பின்னனியில் தங்களது இரானுவத்தினர் மூலமாக ஆதிக்க வெறிகொண்டு அப்பாவி மக்களை கொலை செய்த வரலாறுகள் ஏராளம்.
அந்தவகையில் இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி என்ற இரு நகரங்கள் மீது அமெரிக்கா அனுகுண்டுத் தாக்குதல்களை நடாத்தி எதுவுமறியாத பல லட்சக்கணக்கான அப்பாவி ஜப்பானியர்களை கொலை செய்தது முதல் இன்றுவரை வியட்நாம், யூகோஸ்லாவாக்கியா, எதியோப்பியா, கம்போடியா, ஆப்கானிஸ்தான், ஈராக் என நேரடியான கொலைக்களமும், மற்றும் இன்னும் ஏராளமான நாடுகளில் மறைமுக செயற்பாடுகள் என அமெரிக்காவின் கொலைப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.
அதுமட்டுமல்லாது இன்று வரை குவாண்டனமோ போன்ற பல சிறைச்சாலைகளில் சித்திரவதை முகாம்களை நடத்தி மனித குலத்துக்கு கேடு விளைவிக்கின்ற கொடூரமான சித்திர வதைகளை அமெரிக்கா நடாத்தி வருகின்றது.
அத்துடன் இலங்கையிலும் இராணுவத்தினர் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக பல வதை முகாம்கள் நடாத்திவருகின்றனர். 2009 இல் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது நாப்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. அப்படியிருந்தும் அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளை ஜனநாயக குடியரசுகளாகவே உலகம் நம்புகின்றது.
தனது நாட்டில் சுதந்திரத்துக்காக போராடும் செச்சினைய இஸ்லாமியர்களை படுகொலை செய்த ரஷ்யாவும், அமெரிக்காவும் சேர்ந்து, அதாவது ஒட்டுமொத்த உலக இஸ்லாமியர்களின் எதிரிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஐ.எஸ் அமைப்பினர்களுக்கு எதிராக ஈராக், சிரியா நாட்டு படைகளுடன் சேர்ந்து வெவ்வேறாக விமானத் தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் இடம்பெறும்.....................

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -