மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் ஓ.எல்.தின விழாவும் இலக்கு மலர் வெளியீடும்

பி.எம்.எம்.ஏ.காதர்-


ருதமுனை அல்மனார் மத்திய கல்லுரி மாணவர்களின் ஓ.எல்.தின விழாவும், இலக்கு சஞ்சிகை வெளியீடும் இன்று(02-12-2015)பாடசாலை மண்டபத்தில் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது.


இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்
கலந்து இலக்கு சங்சிகையை வெளியீட்டு வைத்தார் இங்கு அவர் உரையாற்றுகையில்:-இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் கல்விக்கு
அதிக நிதி ஒதுக்கியிருப்பது இலங்கையின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு
வழிவகுத்திருக்கின்றது.

இதன் மூலம் பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளின் பௌதீக வழங்களை
கட்டியெழுப்புவதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது இது இன்றைய
நல்லாட்சியின் நல்ல சகணமாகும்.
இந்தப் பாடசாலையில் இருக்கின்ற பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டது முதல்கட்டமாக இந்த மண்பத்திற்கு கதிரைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஐந்த இலட்சம் ரூபாய்களை ஒதுக்குகின்றேன் பின்னர் படிப்படியாக என்னால் முடிந்தவரை இப்பாடசாலைக்கு உதவுவேன் என்றார்.
இங்கு கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் டாக்டர் எம்.ஐ.எம்.ஹபீல் ஆகியோர் கலந்து கொண்டு கடந்த வருடம் ஓ.எல் பரிட்சையில் சிறந்த பெறுபெறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

மேலும் பிரதி அதிபர் ஏ.எம்.அன்சார்,ஆரம்பப்பிரிவு அதிபர் முகைதீன்
முசம்மில்,உதவி அதிபர் எம்.எம்.எம்.நியாஸ் ஆகியோருடன் பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் மாணவர்களும் கலந்து கொண்டனர் இங்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -