சவூதி அராபியாவில் நல்லடக்கம் செய்யப்பட்ட மற்றுமொரு ரிசானா..!



லங்கை இளம் குடும்பத் தலைவி ஒருவர் நேற்று திங்கட்கிழமை சவூதி ரியாத் நகரில் மரணமானார். கிண்ணியா பைசல் நகரைச் சேர்ந்த 30 வயது ரிசானா நியாஸ் என்ற இரண்டு பிள்ளையின் தாய் ஒருவரே மரணமாகியுள்ளார்.

இவர் சவூதி ரியாத் நகரில் வீட்டுப் பணிப் பெண்ணாக கடமையாற்றி வந்திருந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சுகவீனமுற்று காணப்பட்டதாகவும் பின்னர் ரியாத் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்..

இவரின் ஜனாஸா குடும்பத்தினரின் அனுமதியுடன் இன்று செவ்வாய்கிழமை சவூதி அராபியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பில் குடும்பத்தினர் எமது இம்போட் மிரர் செய்தித்தளத்திற்கு தெரிவித்த கருத்தாக எமக்கு ஒரு மெயில் கிடைக்கப்பெற்றது .

மரணித்த ரிசானா நியாஸின் ஜனாஸா இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை. அவரது ஜனாஸா இன்னும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது .

இது தொடர்பில் எமது செய்தித்தளம் குறித்த தகவல் தொடர்பாக செய்தி அனுப்பிய நபரை (அ.அஸ்வர்) தொடர்பு கொண்ட வேலை தொலைபேசி துண்டிக்கப்பட நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -