லக்சிறி கார்கோவின் அறிவித்தல் -சவூதி மற்றும் இதரநாடுகளிலிருந்து பெட்டிகள் அனுப்புபவரக்ளுக்கு

ண்மைக்காலமாக பேஸ்புக்கில் எமது கார்கோ தொடர்பாக ஒரு சில தவறான பதிவேற்றங்கள் போடப்பட்டுள்ளன. இது தொடர்பாக எமது நிறுவனம் மிகவும் வருந்துகிறது காரணம் பல சவால்களுக்கு மத்தியில் கிழக்கு மாகாண மக்களுக்கு இலகுவான,சிறந்த ஒரு சேவையை
கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நிந்தவூரில் இந்த கிளையை ஸ்தாபித்தோம். பேஸ்புக் பதிவேற்றங்களில் குறிப்பாக இரண்டு விடயங்கள் போடப்பட்டுள்ளன. கார்கோவில் லஞ்சம் வாங்குவதாகவும், அதேவேளை பெட்டிகளை உடைத்து பொருட்களை திருடுவதாகவும்  குறிப்பிடப்பட்டிருந்தது.

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் பொருட்களில் தீர்வை வரி (Tax) செலுத்த வேண்டிய பொருட்களும் இருக்கும். அவ்வாறான பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்பது இது இலங்கை அரசின் சட்டமே தவிர கார்கோவின் சட்டமல்ல.( உதாரணமாக 2 TV இருந்தால் 1 TV
க்கு வரி செலுத்த வேண்டும்). அவ்வாறு வரி செலுத்துவதை ஒரு சிலர் லஞ்சம் என நினைக்கின்றனர். இது லஞ்சம் அல்ல அரச வரி.

அடுத்தது பெட்டியை உடைத்து பொருட்களை எடுப்பதாகவும் ஒரு புகார். இதுவும் முற்று முழுதான பொய்யாகும். உலகமெங்கும் 40 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட எமது லக்சிறி நிறுவனம் வாடிக்கையாளர்களின் பொருட்களை திருடி தங்களின் பெயரைக் கெடுத்துக் கொள்ள
விரும்பாது என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல சிரமங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் கிழக்கு மாகாண மக்களுக்காக உருவாக்கப்பட்ட லக்சிறி நிந்தவூர் கிளையை ஒழிக்க சிலர் திட்டமிட்ட வதந்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும்
அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

பொருட்கள் யாவும் அரச சுங்க திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றன. அதற்குள் சென்று சாமான்களை எடுப்பது என்பது அசாத்தியமான விடயம். சஊதி அரேபியாவிலிருந்து மாத்திரம் பெட்டி அனுப்பும் போது அந்நாட்டின் புதிய சட்டத்தின் படி அந்நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் (அரிசி, மா,எண்ணெய்) அரச முத்திரை
பொறிக்கப்பட்ட பொருட்களை பெட்டிகளில் போட கூடாது என்பது அந்நாட்டின் புதிய சட்டமாகும்.

 இவ்வாறான பொருட்களை பெட்டியில் போடும் போது சஊதி அரேபியாவின் ஜித்தா துறைமுகத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இலங்கைக்கு அனுப்பப்படும். இவ்வாறு பரிசீலிக்கப்படும் போது மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள் பெட்டியில் இருந்தால் அதை அந்நாட்டு சுங்க திணைக்களத்தினால் வேறாக்கப்பட்ட பின்னரே அப்பெட்டி இலங்கைக்கு
அனுப்பப்படும். இவ்வாறான ஒரு நிகழ்வு பெட்டி போட்ட ஒருவருக்கு நிகழ்ந்தால் தயவு செய்து லக்சிறி கார்கோவில் சாமான்களை எடுத்துவிட்டார்கள் என பொய் வதந்திகளை பரப்ப வேண்டாம். 

காரணம் சஊதி அரேபியாவில் இந்நிலைமைகளை எடுத்துக்கூறியே உங்களுடைய பெட்டிகள் எமது கார்கோ ஊடாக பெற்றுக்கொள்ளப்படுகிறது.
எனவே இந்நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் மாத்திரமே சஊதியில் வசிக்கும் நண்பர்கள் பெட்டிகளை எங்களிடம் தரவும். தயவு செய்து வீண் வதந்திகளையும்,பொய்களையும் பரப்ப வேண்டாமென கார்கோ நிருவாகம் தயவாக வேண்டிக்கொள்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -