மயோன் முஸ்தபா நாடு திரும்புகிறார் : ஐ.தே. கட்சியில் போட்டி?

முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் அல்ஹாஜ் மயோன் முஸ்தபா விரைவில் நாடு திரும்புகிறார் என நம்பகமாக தெரிய வருகிறது. 

கடந்த 2010 பொதுத் தேர்தலின் பின்னர் மஹிந்த அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி 5 வருடமாக லண்டனில் வசித்து வரும் மயோன் முஸ்தபா முஸ்லிம் சமூகம் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தற்போது அரசியல் களத்தில் இழந்து நிற்கின்ற தனிப்பெரும் ஒரு ஆளுமை என எல்லோராலும் சிலாகித்து பேசப்படும் ஒருவராவார்

தற்போது பாராளுமன்றம் கலைக்கப் பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட முன்வருமாறு அல்லது தேசிய பட்டியலில் உள்ளடக்கி கட்சிக்கு பணியாற்ற வருமாறு கட்சித் தலைமையும் கட்சியின் உயர் மட்டத்தினரும் அழைத்திருப்பதாகவும் அறிய முடிகிறது

நாட்டில் தற்போது நல்லாட்சி உருவானதை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் சிவில் சமூக அமைப்புகள், கட்சி முக்கியஸ்தர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பிலும் அழைப்புகள் தொடர்ந்தவண்ணமுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இந்த அழைப்பினை மக்கள் நலனுக்காக அவர் சாதகமாக பரிசீலிப்பாரா என்பதை இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -