தோல்வியே வெற்றியின் முதல் படி ஹார்க்கோட்ஸ் மருந்து கம்பனியின் உரிமையாளர் அஹமட் றியாஸ்!

அஹமட் இர்ஷாத்-

னது பாடசாலை பருவத்திலிருந்தே நான் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது இலட்சியமாக காணப்பட்டது. ஆனால் இறைவனின் நாட்டம் என்னால் முடியாமல் போய்விட்டது. கொழும்பு சாகிறா கல்லூரியில் கல்விகற்ற நான் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றி அதற்குப் பிற்பாடு கேமாஸ் கம்பனியில் மருந்துகள் சந்தைபடுத்தும் அதிகாரியாக கடமையாற்றத் தொடங்கியதன் பலனாகத்தான் மருந்துகளை இறக்குமதி செய்து எவ்வாறு சந்தைபடுத்துவது என்பதனை முழுமையாக கற்று தனியாக இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்து அதனை உரிய முறையில் சந்தைப்படுத்தி சந்தையில் எமது கம்னிகான முக்கிய இடைத்தினை தக்கவைத்து வருக்கின்றோம். 

இதற்கு எனது விடா முயற்சியும், தோல்விகள் வரும்போதெல்லாம் நம்பிக்கையுடனும், ஏனைய கம்பனிகளின் போட்டிகளை சாதுரியமான முறையில் முறியடிக்கும் விதத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முக்கியமாக வைத்தியர்களின் நன்மதிப்பையும் பெற்றமையே எனது வெற்றிக்கு பிரதான காரணம் என இலங்கையில் 25 வருடங்களுக்கு மேலாக மருந்துகளை இறகுமதி செய்து அதனை சந்தைப்படுதும் கம்பனியான ஹார்க்கோட்ஸ் பிரைவேட் லிமிட்டட் எனும் கம்பனியினை வைத்திருக்கும் அஹமட் றியாஸ் தான் கடந்து வந்த பதையினை அவருடனன நேர்காணலின் பொழ்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அஹமட் றியாஸ் உடனான நெர்ர்கணலின் விலாவாரியான விளக்கமும் காணொளியும் எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இர்ஸாட்:- வியாபாரத்துறையில் படிப்படியாக முன்னேரி இன்று சந்தையில் முக்கிய புள்ளியாக இருக்கும் உங்கள் மீது காலாவதியான மருந்துகளை சந்தைப்படுத்துவதாக பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்படுவதனை ஊடகங்கள் பதிரிகைகள் வாயிலாக அறியக் கிடைக்கின்றது. இதற்கு நீங்கள் என்ன கூற விரும்புக்கின்றீர்கள்?

அஹமட் றியாஸ்:- இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயமாகும். அரசாங்கத்தினை பிரதி நித்தித்துவப்படுத்தும் சில அரசியல்வாதிகள் என்னிடம் சில விடயங்களை எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு உடன்பவில்லை. ஆகவே அவர்கள் எல்லோரும் திட்டமிட்டு உறுவாக்கிய கட்டுக்கதையாகவே இக்குற்றச்சாட்டினை பார்க்கின்றேன். இரண்டாவது இதில் இனவாத செயற்பாடு, பொறாமை, மற்றும் சந்தைபடுத்தலில் காணப்படுக்கின்ற ஏனைய கம்பனிகள் எங்களுடைய வளர்ச்சியினை பொறுக்க முடியாமல் இவ்வாறான கதைகளை கிளப்பி விடுக்கின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் எம் மீது உள்ள பொறாமையின் காரணமக எமது கம்பனியினை மூடி விடுவதே இப்படியானவர்களின் நோக்கங்களாக இருக்கின்றது. இது சம்பந்தமாக இன்று வரைக்கும் எதுவிதமான விசாரணைகளோ வழக்குகளோ தாக்கல் செய்யப்படாமையானது எமது கம்பனியின் உண்மைத்தன்மையினை எடுத்துக் காட்டுகின்றது.

இர்ஸாட்:- சகல வைத்திய நிபுணர்களுடனும் நெருங்கிய தொடர்பினை வைத்திருக்கும் நீங்கள் இலங்கையில் தட்டுப்பாடாக உள்ள முக்கியமான மருந்து வகைகள் எவை என நினைக்கின்றீர்கள்?

அஹமட் றியாஸ்:- மிகவும் தட்டுபாடான மருந்து வகைகள் என்றால் உயிரை பாதுகாக்ககூடிய மருந்துகளாக பாவிக்கப்படும் புற்று நோய், இருதய மாரடைப்பு நோய்களுக்கான மருந்துகளே மிகவும் தட்டுப்பாடாக காணப்படுக்கின்றது. இருந்தும் எமது கம்பனியானது எல்லா பிரதேசங்களுக்கும் எமது சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்களை அனுப்பி சகல விதமான மருந்துகளும் சகல நோய்யாளர்களுக்கும் கிடைக்கும் விதத்தில் எமது பணியினை சமூக சேவையாகவும் செய்து வருக்கின்றோம். அதனோடு இலவச மருத்துவ முகாம்களையும் பரவலாக நாட்டில் ஏற்படுத்தி வருகின்றோம்.

இர்ஸாட்:- இலங்கையில் உங்களுடைய கம்பனியனது ஆயுர்வேத மருந்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமைக்கான காரணம் என்ன?

அஹமட் றியாஸ்:- ஆயுர்வேத மருந்துகளுக்கு எங்களுடைய கம்பனியானது முக்கியத்துவம் கொடுத்தே வருக்கின்றது. இன்று இலங்கையில் இருக்கின்ற மருந்துகளை சந்தைப்படுத்தும் கம்பனிகளில் எமது கம்பனியே அதிகளவான ஆயுர்வேத மருந்துகளை இறக்குமதி செய்து சந்தைபடுத்தி வருக்கின்றது.

இர்ஸாட்:- இலங்கையில் தற்பொழுது அதிகரித்துவரும் மருந்துகளை இறக்குமதி செய்யும் கம்பனிகளின் அதிகரிப்புக்கும், இறக்குமதி செய்யும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பிற்கான பிரதான காரணம் எதுவென நினைக்கின்றீர்கள்?

அஹமட் றியாஸ்:- இதற்கு பிரதான காரணமாக நான் பார்ப்பதானது ஒரு சிலருடைய வெற்றியினை பார்த்து பொறாமை மனப்பாங்குடன் எல்லோரும் வெற்றியடைந்து விடலாம் என்ற குறுகிய என்னத்துடன் கம்பனிகளை ஆரம்பித்து மருந்துகளை இறக்குமதி செய்ய தொடங்குவதே ஆகும். மிக முக்கியமாக மருந்துகள் சந்தைப்படுத்தும் பிரிவில் முதல் இடத்தில் உள்ள எங்களுடைய கம்பனியினை முடக்குவதற்காகவே இவ்வாறான கம்பனிகள் அதிகளவில் உறுவாக்கப்படுக்கின்றன. ஆனால் காலப்போக்கில் சந்தையிலும் சரி, மக்கள் மத்திலும் சரி நிலைத்திருக்க முடியாது என்பதனை அவ்வாறானவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

இர்ஸாட்:- பங்காளதேஸ் உற்பத்தி செய்யும் மருந்துகளை இலங்கை கொள்வனவு செய்கின்றது. அவைகளை வைத்தியர்களும் சிபார்சு செய்கின்றனர். இலங்கையை பங்காளதேசுடன் ஒப்பிடும் பட்சத்தில் பொருளாதாரமாக இருந்தாலும் சரி கல்வித் துறையாக இருந்தாலும் இலங்கை முன்னிலையில் உள்ளது. ஆகவே ஏன் இன்னும் இலங்கையில் மருந்துகளை உற்பத்தி செய்யும் கம்பனிகள் உறுவாக்கப்படவில்லை? ஏன் இன்னும் பிர நாடுகளில் இலங்கை தங்கியிருக்கின்றது?

அஹமட் றியாஸ்:- எமது நாட்டில் தேசிய ஒளடத தினைக்களத்தின் கீழ் செயற்படும் மருந்துகளை உற்பத்தி செய்யும் சில கம்பனிகளுக்கும் அதற்கு ஒப்பான மருந்துகளை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தடைகள் இன்னும் அரசாங்கத்தினை விதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் இலங்கையில் உற்பத்தி செய்து மருந்தினை சந்தைபடுத்தும் பொழுது இரண்டு கோடிமக்களுக்கும் குறைவான மக்களுக்கே சந்தைபடுத்த வேண்டியுள்ளது. 

அதன் அடிப்படையில் உற்பத்திச் செலவானது மிகவும் அதிகரித்து காணப்படுவதனால் பல மடங்கு இலங்கையின் சனத்தொகையினை விடவும் பெரிய நாடுகளாக இருக்கின்ற பாக்கிஸ்தான், இந்தியா, பங்காளதேஸ் போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரே தரத்துடனான மருந்துகளை மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்து நுகர்வோருக்கு குறைந்த விலையில் தரமன மருந்துகளை விற்பனை செய்யக் கூடியதாக இருக்க்ன்றமையே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இர்ஸாட்:- இந்த மருந்துகளை சந்தைப்படுத்தும் துறையினை வியாபாரமாக அல்லது சமுக சேவையாக கருதி இதனை மேற்கொண்டு வருக்கின்றீர்கள்?

அஹமட் றியாஸ்:- இத்துறையானது முற்றிலும் சமூக சேவை சார்ந்த துறை என தனக்கு ஒரே முடிவாக கூற முடியாது.. நான் இதனை ஆரம்பிக்கும் பொழுது வியாபரமாகவே ஆரம்பித்தேன். ஆனால் இத்துறையினை தற்பொழுது சமூக சேவையாகவும் கருதியும் ,அதே போன்று சில நேரங்களில் நட்டம் ஏற்பட்டாலும் அதனை நான் பொருட்படுதாமல் மிகவும் மனத்திருப்தியுடனும், ஆசையுடனும் மேற்கொண்டு வருகின்றேன்.

இர்ஸாட்:- இலங்கையின் பங்குச் சந்தையில் உங்களுடைய கம்பனியின் பங்குகளின் நிலைமை எவ்வாறு காணப்படுக்கின்றது?

அஹமட் றியாஸ்:- இலங்கையில் மருந்துகளை இறக்குமதி செய்யும் கம்பனிகளின் பங்கிகளில் பத்து வீதமான பங்களுக்கான வியாபாரத்தினை எமது கம்பனியே மேற்கொண்டு வருக்கின்றது.

இர்ஸாட்:- பொதுவாக மருந்துகளை இறக்குமதி செய்யும் கம்பனிகள் அதன் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்களை வைத்தியர்களிடம் அனுப்பி சமூக சிந்தனையுள்ள இத்துறையினை முற்றிலும் இலாபமீட்டக்கூடிய வியாபாரமாக மாற்றுகின்றன என மருந்துக் கம்பணிகள் மீது பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்படுக்கின்றது. அதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

அஹமட் றியாஸ்:- சமூகப் பொறுப்பு வாய்ந்த இத்துறையானது வியாபாரத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதனால் இத்துறையினை மேற்கொண்டுவரும் எந்தக் கம்பணிகளும் நட்டத்தினை பொறுப்பேற்க விரும்புவதில்லை. ஓவ்வொரு கம்பனியினுடைய சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்களும் விலையின் அடிப்படையிலும், மருந்துகளின் தரத்தினை வைத்தும் வைத்தியர்களிடம் கதைத்து ஊக்குவிப்பதானது தங்களுடை மருந்துகளின் விற்பனையினை அதிகரித்துக் கொள்வதற்காகவே. இது எல்லா வியாபாரத்துறைகளிலும் இடம் பெறுக்கின்ற சர்வசாதாரணமான விடயமாகும். ஆகவே இதில் பிழைகள் இருக்கின்றன என என்னால் கூறமுடியாது.

இர்ஸாட்:- நீங்கள் இறக்குமதி செய்யும் மருந்துகளில் தற்பொழுது சந்தைப்படுத்தலில் மிக முக்கிய இடத்தினை பிடித்திருக்கும் மருந்து வகைகள் என்ன?

அஹமட் றியாஸ்:- எங்களுடைய கம்பனி மருந்துகளான தோல் நோய்கள், மூலை நரம்புகள் சம்பந்தமான நோய்கள், நுன்னுயிர் கொல்லிகளுக்கான மருந்துகள், இருதய நோய்களுக்கான மருந்துகள் என்பவற்றுடன் அழகு சாதன பொருட்களுக்கும் சந்தையில் தற்பொழுது மிக முக்கியமான இடத்தினை பிடித்துள்ளது.

இர்ஸாட்:- இலங்கையில் தட்டுப்பாடாக நிலவுகின்ற மருந்து வகைகளுக்கு இலங்கை அரசாங்கமும், சுகாதார அமைச்சும் எவ்வகையன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

அஹமட் றியாஸ்:- தற்பொழுது இலங்கையில் மருந்து தட்டுப்பாடுகள் நிலவுவது மிகவும் குறைவாகவே காணப்படுக்கின்றது. அமரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகப்படுதப்பட்ட மருந்து வகைகள் ஒரு கிழமைக்குள்ளே இலகையின் சந்தைக்கு வந்துவிடுக்கின்றன. அதே போன்று சுகாதார அமைச்சும், வைத்தியர்களும் தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றம் அடைந்து காணப்படுவதால் இலங்கையில் மருந்து தட்டுப்பாடுகள் நிலவுகின்றது எனக் கூறமுடியாது.

இர்ஸாட்:- அரச வைத்தியசாலைகளில் இருக்கின்ற மருந்துகளுக்கும், தனியார் வைத்தியசாலை, தனியார் மருந்தகங்கள், வைத்தியர்களின் மற்றும் அதனோடு சேர்த்து பகுதி நேர வைத்திய சலைகளுக்கும் நீங்கள் விற்பனை செய்கின்ற மருந்துகளுக்கும் இடையிலான வித்தியாசத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

அஹமட் றியாஸ்:- அரசாங்க வைத்தியசாலைகளில் இருக்கும் மருந்துகள் அதன் Generic இனப் பெயரின் அடிப்படையில் கேள்விமனு கோறப்பட்டு இறக்குமதி செய்யப்படுக்கின்றது. சந்தைப்படுத்தலில் ஈடுபடும் மருந்து கம்பனிகளை வைத்திருக்கும் நாங்கள் Brands உற்பத்தி தரத்தின் அடிபடையிலே மருந்துகளை இறக்குமதி செய்து சந்தைபடுத்துக்கின்றோம். விலைகளின் அளவுகளிலும் வித்தியாசங்கள் இருந்தாலும் அரசாங்கம் கொள்வனவு செய்யும் மருந்துகளின் தரத்தில் குறைபாடுகள் இருக்கின்றன எனக் கூறமுடியாது.

இர்ஸாட்:- சாதாரணமாக மனிதனாக பிறக்கின்ற எல்லோருக்கும் ஓர் இலட்சியம் இருக்கும். இந்த துறையில் முதன் முதால மருந்துகள் சந்தைபடுத்தும் அதிகாரியாக உங்களுடைய மருந்து பையினை தூக்கிய காலத்தில் இருந்த உங்களுடைய இலட்சியத்தினை அடைந்து விட்டிர்களா? அல்லது இன்னும் பலபடிகள் நீங்கள் முன்னேரி செல்வதற்கு இருக்கின்றதா?

அஹமட் றியாஸ்:- இன்னும் நான் அடைவதற்க்கு பல படிகள் இருக்கின்றன. நான் தற்பொழுது அடைந்து கொண்டமை எல்லம் வெறும் வியாபாரி ஒருவர் அடைய நினைக்கும் இலட்சியத்தினைத்தான் நான் அடைந்துள்ளதாக நினைக்கின்றேன். தேசியத்திலும் உலகத்திலும் பேசபடும் அளவிற்கு தரமான மருந்து தொழிற்சாலை ஒன்றினையும், அதனோடு சேர்த்து வைத்தியசாலையையும் உறுவாக்குவதே எனது இலட்சியமாக கொண்டு செயற்பட்டு வருக்கின்றேன்.

இர்ஸாட்:- நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர் என ஒரு ஆங்கில பத்திரிகை உங்களை சுட்டிக்காட்டியிருந்தது. அதைப்பற்றி உக்களுடைய கருத்தென்ன?

அஹமட் றியாஸ்:- இயற்கையாகவே நான் ஒரு விடயத்தினை மக்கள் சகலவிதத்திலும் புரியும்படியாகவும் உரியவர்களிடத்தில் தகவல் சென்றடையும் வன்னமும் விளக்கமளிக்கக்கூடிய திறமையினை எல்லாம்வல்ல இறைவன் எனக்கு தந்துள்ளான் என நினைக்கின்றேன்.

இர்ஸாட்:- முக்கிய அரசியல் புள்ளிகள் கலந்து கொள்ளும் விழாக்களிலும், வைபவங்களிலும் உங்களை பரவலாக காணக்கூடியதாக இருக்கின்றது. அப்படி என்றால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் என்னங்கள் ஏதும் இருக்கின்றதா?

அஹமட் றியாஸ்:- அரசியலுக்கு வரும் எந்த என்னங்களும் என்னிடம் கிடையது. அதே போன்று அரசியலுக்குள் வந்து சம்பாதிக்க வேண்டும் என்ற தேவைப்பாடும் எனக்கில்லை. ஆனால் சமூக சேவை செய்வதினை எனது குறிக்கோளாகவும் விருப்பமாகவும் கொண்டு செயற்பட்டு வருக்கின்றேன்.

இர்ஸாட்:- உங்களுடைய கம்பனியில் நீங்கள் உறுவாக்கிய சந்தபைப்படுத்தல் உத்தியோகத்தர்கள் மிகக் குறுகிய காலத்தில் உங்களுடைய கம்பனியை விட்டு வெளியேறி வேறு மருந்துக் கம்பனிகளில் கூடிய ஊதியத்துடன் வேலையினை தேடிக்கொள்கின்றனர். இதனை நீங்கள் உங்களுடைய கம்பனிக்கு ஏற்படுகின்ற இழப்பாக நினைக்கவில்லையா?

அஹமட் றியாஸ்:- இன்றைய இளம் சமூதாயமனது இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் பலமொழிக்கு அமைவாகவே வாழ்ந்து கொண்டு செல்கின்றது. அவர்களிடம் வேறு கம்பனிக்காரர்கள் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபய்கள் அதிகமாகத் தருக்கின்றேன் எனக்கூறும் பொழுது தனது இலட்சியத்தினை கைவிட்டு தான் செய்யும் தொழிலில் பொறுமை இழந்தவர்களாக எமது கம்பனியை விட்டுச் செல்கின்றனர். 

அப்படி பார்க்கப் போனால் பல கம்பனிகளில் முகாமையாளர்களாகவும், முக்கிய இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் எமது கம்பனி உறுவாக்கியவர்களே. பொதுவாக மருந்து கம்பனிகளில் வேலை செய்யும் இளைஞர்கள் இவ்வாறான செயற்பாடுகளிலே ஈடுபட்டு வருகின்றனர். வியாபாரதுறையில் எவ்வளவு உழைத்துள்ளோம் என்பது முக்கியம் அல்ல மாறாக பிறர் எம்மால் எவ்வளவு பிரயோசனம் அடைந்துள்ளார்கள் என்பதுதான் முக்கியமான விடயமாகும்.

இர்ஸாட்:- நீங்கள் சந்தைப்படுத்தல் துறையில் படிப்படியாக முன்னேறி முக்கிய இடத்தினைப் பிடித்தவர் என்றவகையில் தற்பொழுது சந்தைப்படுத்தல் துறையினை உறுவாக்கிவருக்கின்ற இளம் சமூதாயத்திற்கு எதைக் கூற விரும்புக்கின்றீர்கள்?

அஹமட் றியாஸ்:- எந்த வியாபாரமாக இருந்தாலும் அதில் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும். இன்னொருவர் வெற்றி கண்டுவிட்டார் என்பதற்காக தனது வியாபாரத்தினை வைத்து விட்டு மற்றவருடைய வியாபாரத்தின் பக்கம் சாய்து விடக் கூடாது. நாங்கள் செய்கின்ற சேவைகளோ, சந்தைப்படுத்தல் முறைமைகளோ, அல்லது வியாபாரமோ மற்றவர்கள் செய்வதினை விடவும் திறமையானதாகவும் , அதிகப்படியாகவும் இருக்கத்தக்கதாக அமைய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனக் கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.

வீடியோ நேர்காணல்:- 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -