சவூதி தற்கொலை குண்டு தாக்குல் :ஐ.எஸ் பொறுப்பேற்பதாக அறிவிப்பு

தற்கொலை தாக்குதல் நடாத்தியதாக கூறப்பாடுபவரின் படம்
கிழக்கு சவுதியில் அமைந்துள்ள, ஷீஆ பிரிவை சேர்ந்த சவுதி பிரஜைகள் அதிகம் சென்று வரம் அலி இப்னு அபூதாலிப் மஸ்ஜிதில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் தாம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளனர்.

டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர்கள் இவ்வாறு பொறுப்பேற்றுள்ளனர்.

அதே வேலை தற்கொலை குண்டு தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படும் ஒருவரின் படத்தையும் டுவிட்டர் ஊடாக அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் ஒரு நூற்றாண்டுக்கும் பின்னர் சவுதி நிலப்பரப்பில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான தாக்குதல் சம்பவமாக கருதப்படிகிறது.

சிரியா, ஈராக் போன்ற பிரதேசங்களில் ஆத்க்கம் செலுத்தி வரும் ஐ. எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் இயங்கி வரும் சர்வதேச கூட்டணியுடன் சவுதி இணைந்து செயல்படுவதற்கு எதிராக ஐ. எஸ். கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
DC/sa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -