அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடப் போகும் மாபெரும் தவறு!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரான கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நிலையில் (சுயமாக அல்ல… அழுத்தங்கள் காரணமாக) அவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து அரசியலில் ஈடுபடவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி சம்மாந்துறையில் கூட்டம் ஒன்றும் இடம்பெறவிருந்தது. அமைச்சர் ரிஷாத் கலந்து கொள்ளவிருந்த கூட்டத்திலேயே இஸ்மாயில் கட்சியில் இணைந்து கொள்ளவிருந்த போது அந்தக் கூட்டம் பிறிதொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரான கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலை கட்சிக்குள் உள்வாங்கும் விடயத்தில் அம்பாறை மாவட்டத்தில் அதிக எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையிலும் அவற்றினை புறந்தள்ளிய அமைச்சர் ரிஷாத், அவரை இணைக்க முயல்வது மிக..மிகத் தவறான ஒரு நடவடிக்கையாகவே நான் துணிந்து கூறுவேன்.

மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ள ஒருவரை, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அமைச்சர் ரிஷாத் உள்வாங்கிச் செயற்படுவாரானால் நிச்சயமாக “ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.“ என்ற நிலைமைதான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஏற்படும் என்பது நிச்சயம்.

அத்துடன் இந்தக் கட்சிக்குள் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் நுழையவுள்ளதன் சூழ்ச்சிகரமான பின்னணிகள் தொடர்பிலும் அமைச்சர் ரிஷாத் இன்னும் அறிந்து கொள்ள முடியாத ஒரு சின்னப்பிள்ளையாக இருக்கிறார் போல் தெரிகிறது. அமைச்சரின் கழுத்துக்கே கத்தி வரும் என்பதனைப் புரிந்து கொள்ளட்டும்.

இதேவேளை. அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்பில் பலதரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை உள்வாங்கி தயாரிக்கப்பட்ட மிக இரகசியமான அறிக்கை ஒன்றும் கட்சியின் தலைவர் என்ற வகையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கயையின் கையொப்பமிடாத பிரதி ஒன்று எனக்கு கிடைத்துள்ளது. அந்த அறிக்கையிலும் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தொடர்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..

Why Leader of ACMC wants to take corrupted people in to safeguard them – Ismails’ case.

எனவே, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலை இணைத்துக் கொண்டு செயற்படுவாரானால் அம்பாறை மாவட்டத்தில் இந்தக் கட்சியின் நிலைமையானது “இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்“ என்றே மக்கள் ஏளனம் செய்யும் நிலைக்கு விடயம் போய்விடும். இருந்து பாருங்கள் அமைச்சர் ரிஷாத் அவர்களே! நான் கூறுவது நடக்கிறதா இல்லையா என்று.

என்றும் துணிவுடன் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.

(அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இரகசிய அறிக்கை (கையொப்பம் இடாத பிரதி) கீழே ஆங்கிலத்தில் உள்ளது.

ACMC in Ampara

Fact finding mission and suggestions for IA 1 seat at the GE 2015 Target
Meetings held:
• Maligaikkadu Fishermen Societies – Najeemudeen Mason 
• Sainthamaruthu - Fouzer
• Sammanthurai Pre School Teachers – Thanees
Palamunai – Sabeer Master
• Irakkamam – Najeem NIB, Thanees’ Uncle
• Cegu Issadeen – Naleem Master
• Central Camp – Hasan, Dishath, Womens Society 
• Kalmunai Kudy – Jesath
• Mavadipalli – Irzath 
• Sammanthurai – Jabbar, Societies J Block, Kallarichchal.
• Akkaraipattu – Hubail, Nowsath
• Pottuvil – Thulkarnain

Views / feedback / comments:

• It is good to be a separate team for the forth coming election – Majority
• It is good to be a candidate on UNP ticket - Few
• Why not ACMC did not work in Ampara while the Secretary of the party is from Ampara 
• Why some of the people those who are representing ACMC is not recognized by the society
• Will the ACMC have enough people in the region to resolve the peoples’ problem
• What kind of difference the ACMC will bring to Ampara compared to SLMC or NC
• No offices have been seen in Ampara for ACMC
• Why Leader of ACMC wants to take corrupted people in to safeguard them – Ismails’ case
Suggestions to ACMC:
• To have suitable qualified people to be appointed as Organizers 
• Need of coordination offices in different areas
• Structuring the party presence with enough and influential people
• To have a youth delegate conference in Ampara very soon
• Distribution of some items like : Cricket Clubs, Women’s societies etc
Suggestions to me: 
• Confirm the seat of contesting election
• To have role with identification : Ministry Advisor, Minister’s Coordinating Secretary, Any other which can be utilized to do things in local level – ex. Talking to Police, Talking to some local authorities to resolve the people need in the region.
• A campaign plan with 2 / 3 members for propaganda.
• Minimum to have 2 to 3 meetings in a village a day (from 4.00 pm to 8.30 pm)
• Ensure the meetings are not disturbed, like PMGG mtg at Maligaikkadu. Need of security personal – at least 2 police
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -