அனோஜனின் வழக்கில் முக்கிய திருப்பம்: சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்ய இலங்கை சட்ட நிபுணர்கள் தீவிர முயற்சி!



இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வர்ட் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் – மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஸார்ட் நவாவி, பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் றியாத்தில் சட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பு!

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கையரான அனோஜன் தொடர்பான வழக்கில், அவருக்குச் சார்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் இலங்கையிலிருந்து சென்றுள்ள உயர்மட்ட சட்ட நிபுணர்கள் குழுவினர், சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் மேதகு ஓ. எல். அமீர் அஜ்வட் அஜ்வர்ட் அவர்களுடன் இணைந்து, சவூதி அரேபிய சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு, அனோஜனின் வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு மனுவை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் றியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த மேன்முறையீட்டு மனுவை 2026 ஒக்டோபர் 11ஆம் திகதியான இன்று, சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனோஜனின் வழக்கில் சட்டரீதியான பங்களிப்பை வழங்குவதற்காக இலங்கையிலிருந்து சென்றுள்ள குழுவில், நாட்டின் முக்கிய சட்ட நிபுணர்கள், ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களில்,
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஸார்ட் நவாவி (Additional Solicitor General Azard Navavi)
பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா (Hon. Faizer Musthapha, PC, MP)
ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும (Upul Kumarapperuma, PC)
சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் (Hafeel Farisz, Attorney-at-Law)
ஜித்தாவுக்கான இலங்கை கொன்சுல் ஜெனரல் நீதியரசர் மொஹமட் லப்பார் (Justice Mohomed Laffar)
பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவின் செயலாளர் றியாஸ்தீன் சில்மி (Riyasdeen Silmy)


ஆகியோர் இடம்பெற்றுள்ளதுடன், சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஏனைய அதிகாரிகளும் இந்த நடவடிக்கைகளில் பங்களித்து வருகின்றனர்.

அனோஜனின் வழக்கில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இலங்கை சட்ட நிபுணர்களுக்கும் சவூதி அரேபிய சட்டக் குழுவினருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக, சவூதி அரேபியாவின் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக மேன்முறையீட்டு மனுவைத் தயாரித்தல், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டிய சட்டரீதியான விடயங்களை ஆராய்தல் மற்றும் மேன்முறையீட்டுக்கான தேவையான ஆவணங்களை இறுதிப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் இந்நடவடிக்கையின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.

இலங்கை சட்ட நிபுணர்களின் பங்களிப்புடன், சவூதி அரேபிய சட்டத்தரணிகளின் ஆலோசனைகளையும் ஒருங்கிணைத்து மேன்முறையீட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

றியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளில், இலங்கைத் தூதுவர் ஓ. எல். அமீர் அஜ்வர்ட் முக்கிய ஒருங்கிணைப்புப் பங்களிப்பை வழங்கி வருகின்றார்.

அதேவேளை, ஜித்தாவுக்கான இலங்கை கொன்சுல் ஜெனரல் நீதியரசர் மொஹமட் லப்பார் மற்றும் இலங்கைத் தூதரக அதிகாரிகளின் பங்கேற்பும் இச்சட்ட நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளது.

அனோஜனின் வழக்கில் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மேன்முறையீட்டு வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

அனோஜன் தொடர்பான வழக்கில் மேன்முறையீடு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது, அவரது சார்பில் மேற்கொள்ளப்படும் சட்ட முயற்சிகளின் முக்கியமான அடுத்தகட்டமாக அமைந்துள்ளது.

மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நீதிமன்ற நடவடிக்கைகள் என்பன சவூதி அரேபியாவின் உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகத் தீர்மானிக்கப்படும்.

மேன்முறையீட்டு மனுவின் உள்ளடக்கம், முன்வைக்கப்படும் சட்ட வாதங்கள் மற்றும் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட தீர்மானங்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அனோஜனின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் மனிதாபிமான அடிப்படையிலான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வரும் பின்னணியில், அவரது சார்பில் உயர்மட்ட சட்ட நிபுணர்கள் சவூதி அரேபியாவில் நேரடியாகச் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டரீதியான மேன்முறையீட்டு முயற்சிகளும் மனிதாபிமான அடிப்படையிலான வேண்டுகோள்களும் தனித்தனி நடைமுறைகளைக் கொண்டுள்ள போதிலும், அனோஜனின் எதிர்காலம் தொடர்பில் இவ்விரு அணுகுமுறைகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இம்முயற்சியில் பங்கேற்றிருப்பது, அனோஜனின் சார்பில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

அனோஜனின் வழக்கில் சட்டரீதியான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்ட நிபுணர்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்த முயற்சியின் அடுத்தகட்ட முன்னேற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :