சமூகத்தில் பொருளாதார மற்றும் உடல் ரீதியான சவால்களை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், குறித்த பயனாளியின் அன்றாட வாழ்வில் சுயாதீனமாக இயங்குவதற்கு உதவும் வகையில் இருசக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
இந்த மனிதநேய உதவியை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் வழங்கி வைத்தார்.
அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு சமூக மற்றும் மனிதநேயத் தேவைகள் காணப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் ரஹ்மத் பவுண்டேஷன் தொடர்ச்சியாக பல்வேறு சமூக நலன்புரி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பயனாளியின் குடும்பத்தினர், ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் YWMA பேரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உதவி தேவைப்படும் மக்களுக்கு உரிய நேரத்தில் கரம் நீட்டுவதன் மூலம் அவர்களின் வாழ்வில் நம்பிக்கையையும் நிம்மதியையும் ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
“மனிதநேயம் முதன்மை” என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இத்தகைய சமூகப் பணிகள், சமூகத்தில் பரிவு, அன்பு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் என நிகழ்வில் கலந்துகொண்டோர் பாராட்டுத் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment