மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்! காரைதீவு பொலிஸார் தீவிர விசாரணை



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார், சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், அவர் நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது தொடர்பிலும் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளைக் காரைதீவு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :