புதிய அலை கலை வட்ட மகளிர் அணிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு 2026/2027 ஆண்டுகளுக்கான செயற்குழு ஒருமனதாக நியமனம்



லைநகரில் தனித்துவமான கலை, இலக்கிய மற்றும் சமூகப் பணிகளின் ஊடாக சிறப்பாக இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணிக்கான 2026–2027 ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தெரிவுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.06.2026) அமைப்பின் நிறுவனர் ராதா மேத்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு – 13, புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மகளிர் அணியின் எதிர்கால செயற்பாடுகள், கலை மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்கள், உறுப்பினர்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, 2026–2027 காலப்பகுதிக்கான மகளிர் அணியின் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு நியமிக்கப்பட்டனர்.
தலைவி – திருமதி சிவகெளரி (சுடரி)
உப தலைவி – திருமதி ஷிபானியா
செயலாளர் – திருமதி தமிழ்செல்வி (தென்றல்)
உப செயலாளர் – திருமதி ஸ்ரீமதி
பொருளாளர் – திருமதி சூரியகுமாரி
இலத்திரனியல் ஊடகப் பொறுப்பாளர் – செல்வி பிரபா


மேலும், அமைப்பின் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் ஏனைய இணைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

புதிய நிர்வாக சபை, மகளிரின் கலைத் திறன்கள், தலைமைத்துவ ஆற்றல்கள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர் அணியின் உறுப்பினர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விசேட அதிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :