முர்ஷித் - கல்குடா - ஸம் ஸம் வீதி செப்பணிடப்படுமா? - மக்கள் கேள்வி


எஸ்.எம்.எம்.முர்ஷித்-

க்களுக்கான அபிவிருத்தியா? மக்களுக்கு இடையூறான அபிவிருத்தியா? என கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை ஸம் ஸம் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையினால் குடிநீர்க்குழாய் பதிப்பதற்காக வெட்டப்பட்ட பிறைந்துரைச்சேனை ஸம் ஸம் வீதி செப்பணிடப்படாமல் நீண்ட நாட்களாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதனால் இவ்வீதியில் வசிக்கும் பொதுமக்களும் இவ்வீதியைப் பயன்படுத்துவோரும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியில் பெண்கள் அரபு மதரஸா அமைந்துள்ளதுடன், இவ்வீதியைப்பயன்படுத்தும் பாடசாலை மாணவர்களும் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

வெட்டப்பட்டு வீதி குன்றுங்குழியுமாகக் காணப்படுவதனால் நோயாளிகளை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்வதற்கு முச்சக்கர வண்டிச்சாரதிகளும் வர மறுக்கின்றனர். இதனால் உரிய நேரத்திற்கு நோயாளிகளை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்வதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக இவ்வீதியில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

இவ்வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையில் இரு உறுப்பினர்கள் இருந்தும் இது தொடர்பில் கவனம் மேற்கொண்டதாகவோ இதற்கு உரிய தீர்வினைப் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களும் பிரதேச சபைத்தவிசாளரும் கவனம் மேற்கொண்டு இவ்வீதியை விரைவாக செப்பணிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :