எம்.என்.எம். அப்ராஸ்-
அண்மையில் துருக்கிக்கு விஜயம் செய்த ஊடகக் குழுவில் இடம்பெற்றதுடன், 2025 ஆம் ஆண்டுக்கான விபரணக் கட்டுரைப் பிரிவில் தேசிய விருதை வென்ற ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் அவர்கள் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
பிரதேச கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகளை முன்னெடுத்து வரும் அல்-மீஸான் பௌண்டேஷனின் தவிசாளராகவும் நூருல் ஹுதா உமர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அவரின் ஊடகத்துறை பணிகள் மற்றும் கல்விச் சேவைகளை பாராட்டும் வகையில் கல்வி சமூகத்தினர் அவரது இல்லத்திற்கே நேரில் சென்று கௌரவிப்பு நிகழ்வை நடாத்தினர்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன், பிரதி அதிபர் எப்.எம்.ஆர். ஹாதிம், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதன்போது, ஊடகம் மற்றும் சமூக சேவைகள் ஊடாக இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் நூருல் ஹுதா உமரின் பங்களிப்புகள் பாராட்டப்பட்டன.
.jpg)
0 comments :
Post a Comment