அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இவ்வருட உழ்ஹிய்யா (குர்பானி) கிரியைகளை நிறைவேற்றல் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கும் வழிகாட்டல்


எம்.எஸ்.எம்.ஸாகிர்-

பொது நிர்வாக அமைச்சின் 07.05.2026ஆம் திகதிய HA/1/2/වෙසක්/2026 ஆம் இலக்க சுற்றுநிருபத்திலிருந்து மே மாதம் 30, 31 ஆகிய தினங்கள் தவிர்ந்த மார்க்கம் அனுமதித்துள்ள ஏனைய நாட்களில் உழ்ஹிய்யா கொடுப்பதில் தடையில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் காலாகாலமாக நிறைவேற்றிவரும் இந்த மார்க்க கடமையை அதே கண்ணியத்துடன் நிறைவேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் இதற்குரிய ஜம்இய்யாவின் மார்க்க வழிகாட்டல்களைப் பேணி நடக்குமாறும் அவற்றை உரிய காலத்தில் அறிவிப்போம் எனவும் தெரிவிக்கிறோம்.

அந்தவகையில், எதிர்வரும் 17ஆம் திகதி துல்-ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கப்படவுள்ளது. அன்றைய தினம் தலைப்பிறை தென்பட்டால், ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகிய எதிர்வரும் 27 மற்றும் 28, 29 ஆகிய திகதிகளில் மாத்திரம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுமாறும், 17ஆம் திகதி தலைப்பிறை தென்படவில்லை எனில் பெருநாள் தினமாகிய 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுமாறும் ஜம்இய்யா வழிகாட்டுகிறது.

இஸ்லாம் வலியுறுத்தும் இந்த முக்கிய இபாதத்தை பொறுமை, சமூக உணர்வு மற்றும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமூகத்தினரிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :