பிறைந்துரைச்சேனை அல் யகீன் மகளிர் அரபுக்கல்லூரியின் 8வது அல் ஆலிமா பட்டமளிப்பு விழா!



எஸ்.எம்.எம். முர்ஷித்-
வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை அமைந்துள்ள அல் யகீன் மகளிர் அரபுக்கல்லூரியின் 8வது அல் ஆலிமா பட்டமளிப்பு விழா, கல்லூரியின் தலைவர் எம்.எஸ். முகைதீன் தலைமையில் நேற்று (16.05.2026) சனிக்கிழமை பதுறிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் ஐ.எல். முஹம்மட் றிபாய் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் அல் ஆலிம் எம்.ஏ.எம். ரஹ்மதுல்லாஹ் பலாஹி கலந்து கொண்டார்.

மேலும், பிரதம பேச்சாளராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரசாரக்குழு உறுப்பினர் அஷ்ஷெய்க் அல் ஆலிம் ஆஷிக் அபுல் ஹஸன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கல்குடா கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம். தாஹிர், அந்நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். றிஸ்வான், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரியும் வாழைச்சேனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருமான ஏ.எம்.எம். தாஹிர், வாழைச்சேனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஏ.எல். முஸம்மில், முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி எஸ்.ஏ.எம். அஷ்ரப், கல்லூரியின் கட்டடக்குழுத் தலைவர் எம்.எஸ். சம்சுதீன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, கல்விப் பயிற்சிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பதின்மூன்று மாணவிகளுக்கு “யகீனியா” அல் ஆலிமா பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் சமய மற்றும் கல்வி முக்கியத்துவம் மிக்க உரைகள் இடம்பெற்றதுடன், பட்டமளிப்பு நிகழ்வு சிறப்புற நிறைவுற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :