இலங்கை அரசினால் நடத்தப்பட்ட 40வது அரச கலாபூசண விருது விழா கடந்த 12.01.2026 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இந்த விருது விழாவில் கௌரவிக்கப்பட்ட இருநூறு கலைஞர்களில் ஒரேயொரு முஸ்லிம் பெண்ணாக கவிஞினி, எழுத்தாளர், நாவலாசிரியை, நாடக ஆசிரியை எனப் பல்துறை கலை ஆளுமை கொண்ட சம்மாந்துறை மசூறா சுஹுறுடீன் ஆசிரியை அவர்கள் கலாபூசணம் விருதைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
அவரது இந்தச் சாதனை சம்மாந்துறை மண்ணுக்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில், அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை, பாவலர் பஷீல் காரியப்பர் ரசிகர் வட்டம் உள்ளிட்ட சம்மாந்துறைப் பகுதியிலுள்ள பல்வேறு இலக்கிய அமைப்புகளும், ஊர் மக்களும் மசூறா சுஹுறுடீன் ஆசிரியைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

0 comments :
Post a Comment