பிரின்ஸ் கல்லூரியின் 13வது வருடாந்த கலை நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் கடந்த 03.01.2025 அன்று நற்பிட்டிமுனை கமு/கமு/லாபிர் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். அவருடன் கௌரவ அதிதிகளாக தாருல் ஹிக்மா அரபு கல்லூரி பணிப்பாளர் அஷ் ஷெய்க் அல். நாசீர்கனி, கமு/கமு/லாபிர் வித்தியாலய அதிபர் எம்.சி. நஜீப், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம். ஹாரீஸ், எம்.ஐ. நிரோஷ் (JP), ஏ.ஆர். நிஸாப்தீன் (L.O), நிலா ஃபவுண்டேஷன் எம்.ஐ.எம். நிசாம், ஏ.எஸ்.எம். ஜஹ்பர் (SDO), ஆசிரியர் ஐ.எம். றிபான் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை அலங்கரித்தனர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக 2025 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பிரின்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்று பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.
மாணவர்களின் கல்வி மற்றும் கலைத் திறன் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நிறைவுற்றது.

0 comments :
Post a Comment