அதன்படி, கட்சியின் புதிய தலைவராக முஸ்னத் முபாறக் தெரிவு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக இர்பான் முஹிதீன், பொருளாளராக ஏ.எம்.ஏ. அத்னான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும், அவைத் தலைவர் (சேர்மன்) பதவிக்கு முஹம்மத் முஜாஹித், உதவி அவைத் தலைவராக அஹமத் ரஷாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
கட்சியின் உப தலைவர்களாக எம். முர்ஷித், ஆர். சசி குமார், எம். ஸாஹித், எம்.எஸ்.எம். சதீக், எம்.எஸ்.எம். றஸீன் காரி மற்றும் ருஷ்தி நாசிர்ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
உதவி பொருளாளராக எம். பைசல், தேசிய அமைப்பாளராக ஏ.எம்.ஏ. சமாம், ஊடகப் பேச்சாளராக முபாறக் முப்தி ஆகியோரும் புதிய நிர்வாகத்தில் இடம்பிடித்தனர்.
மகளிர் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மகளிர் விவகார இணைப்பாளர்களாக திருமதி ஹனான், பாத்திமா சிஹாமா, பாத்திமா பர்வின் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேவேளை, பெண்கள் விவகார இணை இணைப்பாளர்களாக புஷ்பகாந்த நிஷாந்தி மற்றும் S. பத்மாவதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், மேலதிக செயற்குழு உறுப்பினர்களாக ஏ.எம்.எம். றபீக், ஏ.எல்.எம். அன்சார் (முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்), எம்.ஆர்.எம். மரீர், ஜெனீட்டா குமார், ஏ.எம். ஸக்கீ, எஸ். எல். ரியாஸ், ஏ.எம்.ஏ. சஹ்ரன், ஜெஸ்மின் மௌலவி ஆகியோர் சபையோரால் தெரிவு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், புதிய நிர்வாக சபை கட்சியின் கொள்கைகளை வலுப்படுத்தி, தேசிய அரசியலில் மக்களின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தி செயற்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment