இளம் சாதனை மாணவியின் வீடு தேடி சென்று கெளரவித்த அஷ்ரப் தாஹிர் எம்.பி!



நூருல் ஹுதா உமர்-
சியாவில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது சம்மாந்துறை யைச் சேர்ந்த மின்மினி மின்ஹாவுக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

இதை கௌரவிக்கும் விதமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஸ்ரப் தாஹிர் இன்று (20) இந்த மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு பொன்னாடை போர்த்தி, மின்னும் முத்து சிறப்பு பட்டம் தாங்கிய நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்திருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா, மின்மினியின் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :