உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 - புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் மக்கள் சந்திப்புக்களில் தலைவர் ரிஷாட் பங்கேற்பு!



ஊடகப்பிரிவு-
டந்த வெள்ளிக்கிழமை (11) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச சபை, ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை, கல்பிட்டிய பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.

அந்தவகையில், ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபையில், புளிச்சாக்குளம் - ஆண்டிமுனை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர் ஹில்மி முர்ஷித்தின் கட்சிக் கிளை காரியாலயத் திறப்பு நிகழ்வு புளிச்சாக்குளத்திலும், புத்தளம் பிரதேச சபையில், பொத்துவில்லு வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜீதின் கட்சிக் கிளை காரியாலயத் திறப்பு நிகழ்வு நாகவில்லிலும் இடம்பெற்றது.

அத்துடன், கல்பிட்டிய பிரதேச சபையில், கரம்பை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர் M.A.M.ஆஸ்கீன் மற்றும் பட்டியல் வேட்பாளர் நஹ்லானை ஆதரித்து கரம்பை - சபா மர்வா (A,B), சிலாவத்துறை ஹைராத், இலந்தமோட்டை, சம்சம் நகர், உளுக்காப்பள்ளம், ஹுசைனியாபுரம், ஹுசைனியாபுரம் மேற்கு, 25 ஏக்கர் ஆகிய பிரதேசங்களில் மக்கள் சந்திப்புக்களும் இடம்பெற்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :