நிகழ்வின்போது புதிய வருடத்துக்கான நிருவாகம் ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. இதில் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் தலைவராகவும் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் உபதலைவராகவும் கலாநிதி எம்.சி. அலிபூட்டோ செயலாளராகவும் பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் உபசெயலாளராகவும் பேராசிரியர் ஏ.எல்.எம். றியால் பொருளாளராகவும் தெரிவாகினர்.
பீடங்களுக்கான பிரதிநிதிகளாக கலை கலாச்சார பீடத்திலிருந்து சிரேஷ்ட விரிவுரையாளர் வி. கமலஸ்ரீயும் முகாமைத்துவ வர்த்தக பீடத்திலிருந்து கலாநிதி ஏ.எல்.எம். ஐயூப்கானும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் சார்பில் கலாநிதி ஏ.எச். றிபாஸும் பிரயோக விஞ்ஞான பீடத்திலிருந்து கலாநிதி ரீ.வி.என்.எஸ். மடுகல்லவும் பொறியியல் பீடத்திலிருந்து கலாநிதி டபிள்யூ. ஜி.சி. டபிள்யூ. குமாரவும் தொழில்நுட்பவியல் பீடத்திலிருந்து கலாநிதி ஐ.எம். காலித்தும் நூலகத்தில் சார்பில் கலாநிதி எம்.எம். மர்சூபாவும் தெரிவாகினர்.
0 comments :
Post a Comment