இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில்,
அரசியல் எதிர்காலம் இல்லை என்று உணர்ந்துள்ள எதிர்க்கட்சியிலுள்ள சிறுபான்மை கட்சிகள் - பட்ஜெட்டை எதிர்க்கின்றன.
சூனியமாகிப் போயுள்ள தமது அரசியல் எதிர்காலத்தை மீண்டும் நிலை நிறுத்த இந்த சிறுபான்மை கட்சிகள் திட்டமிட்டு மக்கள் மத்தியில் பட்ஜெட்டுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.
மக்கள் - இன்று இந்த சிறுபான்மை கட்சிகளை வெறுக்க ஆரம்பித்துள்ளனர். இதனை கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அவதானிக்க முடிந்தது.
மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். மக்கள் பட்ஜெட்டை ஆதரிக்கின்றனர் ; வரவேற்கின்றனர். சிறுபான்மை கட்சிகளின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.
இதேவேளை - சிறுபான்மை கட்சியொன்றின் தலைவர் - சிலரை கூலிக்கமர்த்தி எமது கட்சியையும் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகின்றார். போலியான முகநூல் கணக்குகளை உருவாக்கி இதனை மேற்கொண்டு வருகின்றார். அதனைப் பற்றி எவரும் அலட்டிக் கொள்ளவில்லை.; அலட்டிக் கொள்ளப் போவதுமில்லை என்றும் யஹியாகான் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment