தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை



பாறுக் ஷிஹான்-
ல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட குழு ஆரம்பித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) முதல் லெஜன்ஸ் கிறிக்கட் 7 என்ற பெயரில் கடின பந்து சுற்றுக்போட்டியை நடாத்தும் லெஜன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு சொந்தமான மைதான ஆடுகள விரிப்பு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக லெஜன்ஸ் கழகம் சார்பாக அதன் செயலாளரினால் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பொலீஸ் நிலைய பொலிஸாரும் அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவினரும் ( SOCO ) வரைவழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எரியூட்டப்பட்ட மைதான ஆடுகள விரிப்பின் பெறுமதி 120000 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது மைதானத்தில் கடமையாற்றும் காவலாளி கடமையில் இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதே போன்ற சம்பவம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :