ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில், இரு தமிழ் நூல்கள் இன்று கொழும்பில் வெளியீடு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள இரு தமிழ் நூல்களின் வெளியீட்டு விழா இன்று 30 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கொழும்பு - 07 இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் எழுதியுள்ள "நாங்கள் வேறானவர்கள் அல்ல; மண்ணின் வேரானவர்கள்" என்ற நூலும் பேராசிரியர் ராஜன் ஹுல் ஆங்கிலத்தில் எழுதிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்பான "உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் மறைக்கரம் வெளிப்பட்ட போது" என்ற பெயரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள நூலும் இன்று வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களா ன எம். எம். சுஹைர், எம். ஏ.சுமந்திரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் மஹிந்த ஹத்தக ஆகியோர் உரையாற்றவுள்ளதோடு, நூல் விமர்சனத்தை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் நிகழ்த்தவுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் தலைவர் என்.எம். ஆமீன் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது இரு நூல்களும் சலுகை விலையில் வழங்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் சாதிக் சிஹான் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :